Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி திரும்பி வந்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
திரும்பி
வந்தது
1
▾
Meaning
Keep
ஸசந்த்³ர
குமுத³ம்
ரம்யம்
ஸார்க
காரண்ட³வம்
ஶுப⁴ம்
|
தி³வ்ய
ஶ்ரவண
காத³ம்ப³ம்
அப்⁴ரஶைவால
ஶாத்³வலம்
||
Prose passage
▾
Meaning
Keep
ஆகாசமென்ற
மஹாஸமுத்திரத்தில்
சந்திரனே
குமுதபுஷ்பம்;
ஸூரியனே
நீர்க்கோழி;
புஷ்யம்
சிரவணமென்ற
நக்ஷத்திரங்களே
ஹம்ஸங்கள்;
மேகங்களே
பாசியும்
பசும்புல்லும்;
புனர்வஸுவே
பெரிய
மீன்;
அங்காரகனே
முதலை;
ஐராவதமே
பெரிய
தீவு;
ஸ்வாதீ
நக்ஷத்திரமே
ஹம்ஸம்;
காற்றின்
சேர்க்கைகளே
ஓயாத
அலைகள்;
சந்திரகிரணங்களே
குளிர்ந்த
ஜலம்;
புஜங்க
யக்ஷ
கந்தர்வ
கணங்களே
மலர்ந்த
புஷ்பங்கள்;
இப்படிக்
கரைகாணாத
ஆகாச
ஸமுத்திரத்தை
வாயுபுத்திரனான
ஹநுமான்,
கப்பல்
ஸமுத்திரத்தைக்
கடப்பதைப்போல்,
தாண்டிச்
சென்றார்.
Prose passage
▾
Meaning
Keep
மேகக்கூட்டங்களை
இழுத்துக்கொண்டு
போவதுபோலும்,
ஆகாசத்தை
விழுங்குவதுபோலும்,
சந்திரனைக்
கீறுவதுபோலும்,
நக்ஷத்திரங்களோடும்
ஸூரியனோடு
கூடிய
ஆகாசத்தைக்
கைகளால்
பிடிப்பதுபோலும்
சென்றார்.
வெளுப்பு,
சிவப்பு,
நீலம்,
மஞ்சள்கலந்த
சிவப்பு,
மஞ்சள்,
இவ்வர்ணங்களுள்ள
மேகங்களின்
நடுவில்
அவர்
புகுந்து
புறப்படுகையில்
அவர்
தரித்த
வெண்மையான
உத்தரீயத்தால்
சற்றுப்
பிரகாசித்து
சற்று
மறையும்
சந்திரனைப்போல்
விளங்கினார்.
அடிக்கடி
மேகக்கூட்டங்களைப்
பிளந்துகொண்டு
வெளிக்கிளம்பும்
ஆஞ்ஜநேயர்
ஆகாசத்தில்
செல்லுகையில்
கருடனைப்போல்
காணப்பட்டார்.
Prose passage
▾
Meaning
Keep
மேகங்கள்
கர்ஜிப்பதுபோல்
ஸிம்ஹநாதம்
செய்துகொண்டு,
ஆஞ்ஜநேயர்
ராக்ஷஸவீரர்களைக்கொன்று
தன்
பெயரை
லங்கையில்
பலர்
அறியச்
செய்தபின்
அந்த
நகரத்தை
நாசம்
செய்து,
ராவணனை
வருத்தப்படுத்தி,
அவனுடைய
பயங்கரமான
ஸைன்யத்தைக்
கலக்கி,
ஸீதையைக்
கண்டு
நமஸ்கரித்து,
மறுபடியும்
ஸமுத்திரத்தைத்
தாண்டி
வந்தார்.
வழியில்
மைநாக
பர்வதத்தைக்
கண்டு,
நடந்த
விருத்தாந்தங்களை
அவனுக்குச்
சொல்லி,
வில்லிலிருந்து
விடப்பட்ட
பாணத்தைப்போல்
அதிவேகமாய்க்
கிளம்பிவந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
மஹாமேகம்போன்ற
மஹேந்திர
பர்வதத்தை
ஸமீபித்து
பிரளயகால
மேகங்கள்
கர்ஜிப்பதுபோல்
ஸகல
திக்குகளும்
நடுங்கும்படி
ஜயத்வனி
செய்தார்.
அதிசீக்கிரத்தில்
தன்
ஸ்நேஹிதர்களைப்
பார்க்க
ஆசைகொண்டு,
தன்
வாலை
ஆட்டி
மறுபடியும்
கர்ஜித்தார்.
ஆகாசவீதியில்
அடிக்கடி
மாருதி
கர்ஜிப்பதால்
கிரஹமண்டலங்களோடு
கூடின
அந்தப்
பிரதேசம்
பிளந்துவிழுவது
போலிருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
வடக்குக்
கரையில்
மாருதியை
ஆவலுடன்
எதிர்பார்த்துக்கொண்டு
உட்கார்ந்திருந்த
வானரவீரர்கள்,
பெருங்காற்றில்
அடித்துக்
கொண்டுவரப்பட்ட
மேகக்கூட்டங்களின்
த்வனியைப்போன்ற
ஹநுமாருடைய
துடைவேகத்தையும்
ஸிம்ஹநாதத்தையும்
கேட்டார்கள்.
ஏக்கம்
பிடித்திருந்த
அந்த
வானரர்களெல்லோரும்
மாருதியைப்
பார்க்க
ஆசைகொண்டிருக்கையில்,
ஜாம்பவான்
மிகுந்த
ஸந்தோஷத்துடன்
ஸமஸ்த
வானரர்களையும்
ஸமீபத்தில்
அழைத்து,
“ஹநுமான்
உத்தேசித்த
காரியத்தை
ஸகல
விதத்திலும்
முடித்துவருகிறான்
என்பது
நிச்சயம்.
இல்லாவிட்டால்
இவ்வளவு
தைரியமாயும்
ஸந்தோஷமாயும்
சப்தம்
செய்வானா?”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
ஹநுமானுடைய
புஜங்கள்
துடைகளினின்று
உண்டான
வேகத்தையும்
த்வனியையும்
கேட்டு
வானரர்கள்
ஸந்தோஷத்தால்
தாவிக்
குதித்தார்கள்.
அவர்கள்
ஆஞ்ஜநேயரைப்
பார்க்க
விரும்பி
மரத்திற்கு
மரம்,
பர்வதத்திற்குப்
பர்வதம்
தாவினார்கள்.
தூரத்திலிருப்பவனை
வஸ்திரங்களை
விசிறி
அடையாளம்
காட்டிக்
கூப்பிடுவதுபோல்,
அவர்கள்
மரங்களின்
நுனியிலிருந்துகொண்டு
கிளைகளையும்
கொம்புகளையும்
அசைத்தார்கள்.
மலைக்குகைகளில்
அடங்கின
வாயு
எப்படிக்
கர்ஜிக்குமோ
அப்படி
ஹநுமான்
கர்ஜித்துக்கொண்டே
வந்தார்.
மஹாமேகத்தைப்போல்
அவர்
கீழே
இறங்குவதைக்
கண்டு
வானரர்கள்
கைகூப்பி
வணக்கமாய்
நின்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
விருக்ஷங்களடர்ந்த
மஹேந்திர
பர்வதத்தில்
மற்றொரு
பர்வதம்
இறங்கினதுபோல்
ஆஞ்ஜநேயர்
தன்
வேகத்தை
அடக்கி
இறங்கினார்.
ஸந்தோஷத்தால்
தேகம்
பூரிக்க,
அறுபட்ட
இறக்கைகளையுடைய
பர்வதத்தைப்போல்
மாருதி
ஆகாசத்திலிருந்து
இறங்கினார்.
உடனே
ஸகல
வானர
சிரேஷ்டர்களும்
ஆனந்தத்தால்
மலர்ந்த
முகங்களுடன்,
வெகு
ப்ரீதியுடன்
அந்த
மஹாத்மாவைச்
சூழ்ந்துகொண்டு,
யாதொரு
அபாயமும்
இல்லாமல்
திரும்பிவந்த
வானரவீரனுக்குக்
கிழங்குகளையும்
பழங்களையும்
காணிக்கையாகக்
கொடுத்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஜாம்பவானையும்
மற்ற
வானர
விருத்தர்களையும்,
அங்கதனையும்
ஆஞ்ஜநேயர்
நமஸ்கரிக்க,
அவ்விருவரும்
அவரை
உபசரித்தார்கள்.
ஸகல
வானரர்களும்
மெச்சினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
“கண்டேன்
ஸீதையை”
என்று
நடந்த
விருத்தாந்தங்களைச்
சுருக்கமாய்
தெரிவித்து,
அங்கதனுடன்
கைகோத்துக்கொண்டு
மஹேந்திர
பர்வதத்தில்
ஓர்
அழகான
தோப்பில்
உட்கார்ந்துகொண்டு,
வானரர்களைப்
பார்த்து,
“மித்திரர்களே!
நாம்
இவ்வளவு
சிரமப்பட்டுத்
தேடின
ஸீதையைக்
கண்டேன்.
அசோக
வனத்தில்
இருக்கிறாள்.
கோர
ராக்ஷஸிகள்
அவளை
வெகு
ஜாக்கிரதையாய்க்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒற்றைப்
பின்னலுடன்,
தலைமயிர்
சடைவிழுந்து,
தேகம்
இளைத்து
அழுக்கடைந்து
ஆகாரமில்லாமல்
மெலிந்து,
ராமனைப்
பார்க்க
ஆசைகொண்டு
உத்தமமான
பதிவிரதாதர்மத்தை
அனுஷ்டித்து
வருகிறாள்”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அனேக
அர்த்தங்களடங்கிய
ஆஞ்ஜநேயருடைய
வாக்கியங்கள்
துக்கத்தாலும்
கவலையாலும்
வெந்த
மனத்தில்
அமிருத
தாரைகளைப்போல்
விழுந்தவுடன்,
வானரவீரர்கள்
எல்லாவற்றையும்
மறந்தனர்.
சிலர்
ஸிம்ஹநாதம்
செய்தார்கள்;
சிலர்
கூவினார்கள்;
சிலர்
கர்ஜித்தார்கள்;
சிலர்
கிலகில
என்று
சப்தித்தார்கள்;
சிலர்
ஒருவர்க்கொருவர்
போட்டியாய்க்
கர்ஜித்தார்கள்;
சிலர்
வால்களை
உயரத்
தூக்கிப்
பூமியில்
அடித்தார்கள்;
சிலர்
பர்வத
சிகரங்களிலிருந்து
பாய்ந்து,
மதயானையைப்போல்
கம்பீரமாய்
நிற்கும்
ஆஞ்ஜநேயரை
ஆலிங்கனம்
செய்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அங்கதன்
மாருதியின்
வார்த்தையைக்
கேட்டு
வானரவீரர்களுக்கு
நடுவில்
எழுந்து,
“ஆஞ்ஜநேய!
இந்த
விஸ்தாரமான
ஸமுத்திரத்தைத்
தாண்டி
மறுபடியும்
வந்த
உனக்கு
பராக்கிரமத்திலும்
வலிமைக்கும்
நிகருண்டோ?
யஜமானனிடத்தில்
உனக்குள்ள
பக்திக்கும்
உன்
வீரியத்திற்கும்
பராக்கிரமத்திற்கும்
எல்லையுண்டோ?
ஸகல
கீர்த்திக்கும்
இருப்பிடமான
ராமபாரியையைப்
பார்க்கும்படியான
பாக்கியத்தைப்
பெற்றாயே.
ஸீதையைப்
பிரிந்த
துக்கம்
ராகவனுக்கு
நீங்குவதற்கு
நீயல்லவா
காரணம்”
என்று
கொண்டாடினான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
வானரர்கள்
மாருதியையும்
அங்கதனையும்
ஜாம்பவானையும்
சூழ்ந்து,
அந்த
வானரவீரன்
பெருங்கடலைத்
தாண்டினதையும்,
லங்கையைப்
பார்த்ததையும்,
ஸீதையைத்
தரிசித்ததையும்
ராவணனைக்
கண்டு
பேசினதையும்,
இன்னும்
மற்ற
விருத்தாந்தங்களையும்
விஸ்தாரமாகக்
கேட்க
விரும்பிப்
பெரிய
பாறைகளில்
ஹநுமானுக்கெதிரே
கைகூப்பி
உட்கார்ந்தார்கள்.
தேவதைகள்
இந்திரனைச்
சூழ்ந்து
உபசரிப்பதுபோல்
அங்கதனை
வானரவீரர்கள்
சூழ்ந்து
நின்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
மஹாகீர்த்திசாலியான
ஆஞ்ஜநேயரும்
புகழ்பெற்ற
அங்கதனும்
இன்னும்
மற்ற
வானரர்களும்
ஸந்தோஷமாய்
உட்கார்ந்திருக்கையில்,
அந்த
மஹேந்திரகிரியின்
சிகரம்
காந்தியால்
ஜ்வலித்தது.
52
▾
Meaning
Keep
ஹநூமதா
கீர்திமதா
யஶஸ்விநா
ததா²ங்க³தே³நாங்க³த³
ப³த்³த⁴பா³ஹுநா
|
முதா³
தத³த்⁴யாஸிதமுந்நதம்
மஹத்
மஹீத⁴ராக்³ரம்
ஜ்வலிதம்
ஶ்ரியாப
வத்
||
Previous
←
மாருதி ஸீதையிடம் உத்தரவு பெற்றது
Next
மாருதி தன் யாத்திரையை வர்ணித்தது
→