Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி தன் யாத்திரையை வர்ணித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
தன்
யாத்திரையை
வர்ணித்தது
1
▾
Meaning
Keep
ததஸ்தஸ்ய
கி³ரே:
ஶ்ருங்கே³
மஹேந்த்³ரஸ்ய
மஹாபலா:
|
ஹநுமத்
ப்ரமுகா²:
ப்ரீதிம்
ஹரயோ
ஜக்³முருத்தமாம்
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
மாருதியும்
மற்ற
வானரர்களும்
அந்த
மஹேந்திர
பர்வதத்தின்
சிகரத்தில்
அளவற்ற
ஆனந்தத்துடன்
உட்கார்ந்திருக்கையில்,
ஜாம்பவான்
ஸந்தோஷத்தால்
மயிர்க்கூச்சமடைந்து
வாயுபுத்திரனைப்
பார்த்து,
“மாருதே!
ஸீதையை
எப்படிக்
கண்டுபிடித்தாய்?
அவள்
எந்த
ஸ்திதியில்
இருக்கிறாள்?
குரூரனான
ராவணன்
அவளிடத்தில்
எப்படி
நடந்துகொள்ளுகிறான்?
இவை
எல்லாவற்றையும்
எங்களுக்கு
வாஸ்தவமாகச்
சொல்.
ராமனுடைய
ஸன்னிதியில்
எதைச்
சொல்லவேண்டியதென்றும்
எதை
மறைக்க
வேண்டியதென்றும்
இனிமேல்
செய்யவேண்டிய
காரியம்
இன்னதென்றும்
நிச்சயிப்போம்”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஆஞ்ஜநேயர்
ஸந்தோஷத்தால்
மயிர்கூச்சத்துடன்
கைகூப்பி,
ஜானகியை
மனத்தால்
நமஸ்கரித்துப்
பின்வருமாறு
சொல்ல
ஆரம்பித்தார்.
“நீங்கள்
பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே
இந்தப்
பர்வதத்திலிருந்து
ஆகாசத்தில்
தாவி,
ஸமுத்திரத்தைத்
தாண்டித்
தெற்குக்
கரையைச்
சேர
உத்தேசித்துப்
புறப்பட்டேனல்லவா?
வழியில்
ஒரு
பர்வதம்
தங்கமயமான
கொடிமுடிகளுடன்
திடீரென்று
கிளம்பிற்று.
அது
வழி
மறைப்பதைக்
கண்டு
என்
பிரயாணத்திற்கு
இடையூறென்று
எண்ணினேன்.
இதைப்
பிளந்தெறிந்து
அப்புறம்
செல்லவேண்டியதென்று
நினைத்துக்கொண்டு,
அதைக்
கிட்டி
வாலைச்
சுழற்றி
ஸூரியனைப்போல
பிரகாசிக்கும்
சிகரத்தில்
அடிக்க,
அது
தூளாயிற்று.
Prose passage
▾
Meaning
Keep
அந்தப்
பர்வத
தேவதை
என்
உத்தேசத்தை
அறிந்து,
‘குழந்தாய்!’
என்று
என்னை
இனிமையாக
அழைத்து,
‘வானரவீர!
நான்
உன்
பிதாவான
வாயுவிற்கு
முக்கிய
மித்திரன்.
ஆகையால்
உனக்குச்
சிறிய
தகப்பன்
முறை.
இந்த
ஸமுத்திரத்தில்
வஸித்துக்கொண்டிருக்கிறேன்.
மைநாகமென்று
எனக்குப்
பெயர்.
பூர்வகாலத்தில்
பர்வதங்கள்
இறக்கைகளுடன்
நினைத்த
இடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து
லோகத்தில்
அதிக
உபத்திரவத்தைச்
செய்து
கொண்டிருந்தன.
அதைக்
கேட்டு
மஹேந்திரன்
வஜ்ராயுதத்தால்
அவைகளின்
இறக்கைகளை
அறுத்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
உன்
பிதா
என்னை
இந்த
ஸமுத்திரத்தில்
அடித்துக்
கொண்டுவந்து
தள்ளி,
அந்தக்
கஷ்டத்தை
அனுபவிக்காமல்
இருக்கும்படி
காப்பாற்றினார்.
மேலும்,
ராமன்
தர்மாத்மாக்களுக்குள்
சிரேஷ்டர்;
பராக்கிரமத்தில்
மஹேந்திரனுக்கு
ஸமமானவர்.
அவருக்கு
நான்
உதவி
செய்ய
வேண்டியது
அவசியம்’
என்றது.
உடனே
நான்
உத்தேசித்துப்
போகும்
காரியத்தை
அவருக்குத்
தெரிவித்து
உத்தரவு
பெற்றுக்கொண்டு
சென்றேன்.
மைநாகம்
மனுஷ்ய
சரீரத்தை
மறைத்துப்
பர்வதரூபமாய்
ஸமுத்திரத்தில்
இருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
நான்
அதிவேகத்துடன்
ஆகாசத்தில்
வெகுநேரம்
சென்றுகொண்டிருந்தேன்.
அப்பொழுது
நாகங்களுக்கு
மாதாவான
ஸுரஸை
என்ற
தேவஸ்த்ரீ
ஸமுத்திரத்திலிருந்து
என்னை
அழைத்து,
‘வானரசிரேஷ்ட!
தேவர்கள்
உன்னை
எனக்கு
ஆஹாரமாகக்
கொடுத்திருக்கிறார்கள்.
வெகு
காலமாய்
உன்னை
எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன்;
இன்று
கிடைத்தாய்.
உன்னைத்
தின்னப்
போகிறேன்’
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்கேட்டு
நான்
கைகூப்பி
வணங்கி
தீனமான
முகத்துடன்,
‘அம்மா!
தசரதபுத்திரனான
ராகவன்
மஹாபராக்கிரமசாலி;
தேஜஸ்வி;
ஒரு
காரியமாய்
லக்ஷ்மணனென்ற
தம்பியோடும்
ஸீதை
என்ற
பாரியையோடும்
தண்டகாவனத்தில்
ஸஞ்சரித்துக்கொண்டிருக்கையில்
ராவணனென்ற
துராத்மா
ஸீதையை
அபகரித்தான்.
நான்
ராமனுடைய
ஆக்ஞையால்
அவளைக்
கண்டுபிடிக்கச்
செல்கிறேன்.
ராமனுடைய
ராஜ்யத்தில்
வஸித்துக்கொண்டிருக்கும்
நீ
அவருக்கு
ஸஹாயம்
செய்யவேண்டாமா?
அப்படியும்
இஷ்டமில்லாவிட்டால்
நான்
ஸீதையைக்
கண்டு
ராமனுடைய
விருத்தாந்தத்தை
அவளுக்குத்
தெரிவித்து,
அவளுடைய
க்ஷேமத்தை
ராமனுக்குச்
சொல்லிவிட்டு,
இங்கே
வந்து
உன்
வாயில்
பிரவேசிக்கிறேன்;
இது
ஸத்தியம்’
என்றேன்.
நினைத்த
ரூபங்களை
எடுக்கக்கூடிய
ஸுரஸை,
‘என்
கண்ணிற்பட்ட
ஒருவனும்
என்னைத்
தப்பிப்
போகமுடியாது’
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
நான்
பத்துயோஜனையளவு
என்
தேகத்தை
வளர்த்தேன்.
அவள்
அதற்குத்
தகுந்தபடி
வாயை
வளர்த்துக்கொண்டாள்.
நான்
உடனே
என்
தேகத்தைச்
சுருக்கிக்
கட்டைவிரலளவு
செய்துகொண்டு,
அவளுடைய
வாயில்
பாய்ந்து
ஒரு
க்ஷணத்தில்
வெளியே
வந்தேன்.
பிறகு
ஸுரஸை
தன்
நிஜரூபத்துடன்
என்னைப்
பார்த்து
‘குழந்தாய்!
நீ
போகும்
காரியம்
கைகூடட்டும்.
ஸீதையையும்
ராமனையும்
சேர்த்து
வைப்பாய்.
உனக்கு
ஸகல
மங்களங்களும்
உண்டாகட்டும்.
உன்னிடத்தில்
விசேஷப்பிரீதி
வைத்தேன்’
என்று
சொன்னாள்.
அப்பொழுது
ஸகலப்
பிராணிகளும்,
‘நல்லது
நல்லது’
என்று
என்னைக்
கொண்டாடின.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
நான்
விசாலமான
ஆகாசத்தில்
கருடனைப்போல்
அதிவேகமாகச்
செல்லுகையில்,
திடீரென்று
என்
வேகம்
அடங்கிற்று;
செல்லமுடியவில்லை;
ஸகல
திக்குகளிலும்
பார்க்கையில்
ஒன்றும்
காணப்படவில்லை.
‘இது
என்ன
ஆச்சரியம்!
வேகமாகப்
போய்க்கொண்டிருந்த
எனக்கு
இந்த
இடையூறு
நேர்ந்த
காரணமென்ன?
யாதொரு
பிராணியையும்
நான்
போகும்
வழியில்
காணவில்லையே!
என்
நிழலை
யாரோ
பிடித்துத்
தடை
செய்திருக்கிறார்கள்’
என்று
சற்று
யோசித்துத்
துக்கித்துக்
கீழே
பார்க்கையில்,
ஜலத்தில்
ஒரு
பயங்கரமான
ராக்ஷஸி
படுத்திருப்பதைக்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
அவள்
என்னைப்
பார்த்து
இடிபோல்
சிரித்துப்
பரபரப்பில்லாமல்
வெகு
தைரியத்துடன்,
‘பர்வதம்
போன்ற
சரீரத்தையுடையவனே!
வெகு
காலமாக
நான்
ஆகாரமில்லாமல்
வருந்துகிறேன்.
உன்
தேகத்தை
எனக்கு
ஆஹாரமாகக்
கொடுத்து
என்னை
திருப்தி
செய்’
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
நானும்
நல்லதென்று
அவளுடைய
வாயளவைக்
காட்டிலும்
அதிகமாக
என்
தேகத்தை
வளர்த்துக்கொண்டேன்.
அவளும்
என்னை
விழுங்குவதற்குப்
போதுமானவரையில்
தன்
வாயை
வளர்த்துக்கொண்டாள்.
ஆனால்,
நான்
நினைத்த
ரூபங்களை
எடுக்கக்கூடியவனென்று
அவளுக்குத்
தெரியாது.
நான்
உடனே
என்
பெரிய
ரூபத்தைச்
சுருக்கி
அவளுடைய
வாயில்
நுழைந்து
ஹிருதயத்தைப்
பிளந்துகொண்டு
ஆகாசத்தில்
தாவினேன்.
மலைபோன்ற
அந்தக்
கோரராக்ஷஸி
உடனே
கைகளை
உதறிக்கொண்டு
ஸமுத்திரத்தில்
விழுந்து
இறந்தாள்.
அப்பொழுது
ஆகாசத்தில்
ஸஞ்சரிக்கும்
ஸித்தசாரணர்கள்,
‘ஹநுமான்
பயங்கரமான
ஸிம்ஹிகையைக்
கொன்றுவிட்டான்’
என்று
சொல்லக்
கேட்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
நான்
உத்தேசித்த
காரியத்தை
நினைத்துக்கொண்டு
ஆகாசவீதியில்
வேகமாய்ச்
செல்லுகையில்
ஸமுத்திரத்தின்
தெற்குக்
கரையில்
மலைகளும்
வனங்களும்
லங்கா
பட்டணமும்
இருக்கக்
கண்டேன்.
ஸூரியன்
அஸ்தமித்தவுடன்
அங்கிருந்த
பயங்கரமான
காவற்காரர்களுக்குத்
தெரியாமல்
ராக்ஷஸர்களுடைய
ராஜாதானியில்
பிரவேசித்தேன்.
அப்பொழுது
ஒரு
ஸ்த்ரீ
பிரளயகால
மேகத்தைப்போல்
சிரித்துக்கொண்டு
திடீரென்று
கிளம்பி
என்னைத்
தடுத்தாள்.
நெருப்புக்
கொழுந்து
போன்ற
தலைமயிரையுடைய
அந்த
ராக்ஷஸி
என்னைக்
கொல்ல
வருவதைக்
கண்டு
நான்
இடது
கை
விரல்களை
மடக்கி
அவளைக்
குத்தி
ஜயித்துக்
கீழே
தள்ளி,
நகரத்தில்
பிரவேசித்தேன்.
அப்பொழுது
அவள்,
‘மஹானுபாவ!
நான்
லங்கா
தேவதை,
என்னை
நீ
ஜயித்தபடியால்
ஸகல
ராக்ஷஸர்களையும்
ஜயிப்பாய்’
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
நான்
அந்த
ராத்திரி
முழுவதும்
லங்கையெங்கும்
தேடி,
முடிவில்
ராவணனுடைய
அந்தப்புரத்திலும்
நன்றாய்ப்
பரிசோதித்துப்
பார்த்தேன்;
ஸீதையைக்
காணவில்லை.
ஆகையால்
நான்
துக்கஸமுத்திரத்தில்
முழுகிக்
கரை
காணாமல்
தவிக்கையில்,
ஓரிடத்தில்
தங்கப்
பிராகாரத்தால்
சூழப்பட்ட
ஒரு
அழகான
தோட்டத்தைக்
கண்டேன்.
அதன்
சுவரைத்
தாண்டிக்
குதித்து
நான்
விருக்ஷங்கள்
நிறைந்த
அசோகவனத்தையும்
அதற்கு
நடுவில்
ஒரு
பெரிய
சிம்சுபா
விருக்ஷத்தையும்,
அதைச்
சுற்றி
ஸ்வர்ணமயமான
வாழைத்
தோட்டத்தையும்
கண்டேன்
அந்தச்
சிம்சுபாவிருக்ஷத்திற்கு
ஸமீபத்தில்
சிரேஷ்டமான
வர்ணமுள்ள
ஒரு
ஸ்த்ரீ,
பெண்
புலிகளால்
சூழப்பட்ட
மானைப்போல்,
ரத்த
மாம்ஸங்களையே
ஆகாரமாகவுடைய
கோர
ராக்ஷஸிகளால்
சூழப்பட்டிருப்பதைக்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
அவள்
நல்ல
யௌவனப்
பருவத்திலிருப்பவள்;
தாமரை
இதழ்களைப்
போன்ற
நேத்திரங்களையுடையவள்.
ஆகாரமில்லாததாலும்
சோகத்தாலும்
தேகம்
இளைத்து
முகம்
முடித்
தலைமயிர்
புழுதி
படிந்து,
ஒற்றை
வஸ்திரத்துடன்
உட்கார்ந்திருந்தாள்.
எப்பொழுதும்
பர்த்தாவையே
தியானித்துக்கொண்டு
ராவணனிடத்தில்
மிகுந்த
வெறுப்புடன்
ராக்ஷஸிகளால்
மிரட்டப்பட்டு,
பயந்த
மான்
குட்டிபோல்
அங்குமிங்கும்
பார்த்துக்கொண்டு
ஒற்றைப்
பின்னலுடன்
தரையில்
உட்கார்ந்திருந்தாள்.
ஹேமந்தருதுவில்
தாமரையோடையைப்போல்
விகார
வர்ணத்தையுடைய
சரீரத்துடன்
இனி
உயிரை
வைத்துக்கொள்ளுகிறதில்லை
என்று
நிச்சயித்திருந்தாள்.
இப்படி
மஹாகீர்த்திசாலியான
ராமபாரியையை
தரிசித்து
அந்தச்
சிம்சுபா
விருக்ஷத்திலேயே
ஒளிந்திருந்தேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ராவணனுடைய
அரண்மனையிலிருந்து
ஒட்டியாணம்
சிலம்பு
முதலிய
ஆபரணங்களையுடைய
நாதத்துடன்
கலந்து
கம்பீரமான
ஹலஹலா
சப்தமும்
உண்டாயிற்று.
அதைக்
கேட்டு
சிறிது
அச்சமுற்று,
நான்
தேகத்தைச்
சுருக்கிக்கொண்டு
அந்த
விருக்ஷத்தில்
இலைகளின்
மறைவில்
பக்ஷியைப்போல்
ஒளிந்திருந்தேன்.
அப்பொழுது
ஸீதை
இருக்குமிடத்திற்கு
ராவணனும்
அவனுடைய
பத்தினிகளும்
வந்தார்கள்.
அவனைக்
கண்டு
பதிவிரதையான
ஸீதை
துடைகளை
நெருக்கிக்கொண்டு
கைகளால்
ஸ்தனங்களை
மறைத்துக்கொண்டாள்.
என்ன
நேருமோ
என்று
பயத்துடன்,
நம்மை
ரக்ஷிப்பவர்கள்
உண்டோ
என்று
நான்கு
புறங்களிலும்
பார்த்துக்கொண்டு,
ஒருவரையும்
காணாமல்
நடுங்கிக்கொண்டு
துக்கத்தால்
கலங்கியிருந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணன்
அவளை
நமஸ்கரித்து,
‘அழகால்
கர்வமடைந்திருப்பவளே!
என்னைப்
புருஷனாக
அங்கீகரிக்க
மாட்டாயா?
கொழுப்பால்
நீ
என்
இஷ்டப்படி
நடக்காவிட்டால்
இன்னும்
இரண்டு
மாதங்கள்
பொறுப்பேன்.
பிறகு
உன்
ரத்தத்தைக்
குடித்துவிடுவேன்’
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
ஸீதை
வெகு
கோபம்
கொண்டு,
‘ராக்ஷஸப்
பதரே!
அபாரதேஜஸ்வியான
ராமனுடைய
பாரியையைப்
பார்த்துச்
சொல்லத்
தகாத
வார்த்தைகளைச்
சொல்லுகின்ற
உன்
நாக்கு
ஏன்
அழுகி
விழவில்லை!
இக்ஷ்வாகு
குல
சக்கரவர்த்தியான
தசரதருக்கு
நாட்டுப்
பெண்
என்பதை
மறந்தாயோ?
அயோக்கிய!
பாபி!
என்
பர்த்தா
இல்லாத
ஸமயத்தில்
அந்த
மஹாத்மாவிற்குத்
தெரியாமல்
என்னை
அபகரித்து
வந்தாயே.
உன்
வீரியத்தைச்
சுடவேண்டும்.
ராகவனுக்கு
நீ
ஸமமாவாயா?
அவருக்கு
ஊழியம்
செய்யக்
கூடத்
தகுந்தவனல்ல.
ஸத்தியவானும்
யுத்தத்தில்
எல்லோராலும்
கொண்டாடப்பட்டவரும்
யக்ஞங்களைச்
செய்தவருமான
ரகுவீரன்
எங்கே,
நீ
எங்கே?’
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதையின்
கடுமையான
வார்த்தைகளைக்
கேட்டு
ராவணன்
கோபம்
கொண்டு
ச்மசானத்தில்
சிதையில்
எரியும்
அக்னியைப்போல்
ஜ்வலித்துக்
கண்களை
உருட்டி
விழித்து
வலதுகை
விரல்களை
மடக்கிக்கொண்டு
ஸீதையைக்
கொல்ல
ஓடிவந்தான்.
அப்பொழுது
அங்கிருந்த
ஸ்த்ரீகள்
‘ஹா!
ஹா!’
என்று
கத்தினார்கள்.
அவர்களுக்குள்
மந்தோதரி
என்ற
பட்டமஹிஷி
ராவணனைத்
தழுவிப்
பிடித்துக்கொண்டு,
‘மஹாராஜா!
பராக்கிரமத்தில்
மஹேந்திரனுக்கு
ஸமமான
தங்களுக்கு
ஸீதையால்
என்ன
பிரயோஜனம்?
தேவ
கந்தர்வ
யக்ஷ
கன்யைகள்
கணக்கில்லாமல்
தங்களுடைய
இஷ்டத்தை
எதிர்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடன்
கிரீடிக்கலாம்,
வாருங்கள்’
என்று
அழைத்துக்
கொண்டு
போனாள்.
Prose passage
▾
Meaning
Keep
(தான்யமாலினி,
மந்தோதரி
என்ற
இரு
மனைவியருமே
ராவணனைத்
தடுத்தார்கள்.
தான்யமாலினி
தடுத்ததாக
ஸர்க்கம்
இருபத்திரண்டில்
கூறப்பட்டதாலும்
மந்தோதரி
தடுத்ததாக
இங்கு
கூறப்பட்டதாலும்
இது
விளங்கும்.)
அப்பொழுது
ராவணன்
கோபம்
தணிந்து
காமபரவசனாய்
அவர்களுடன்
தன்
அரண்மனைக்குச்
சென்றான்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
அங்கிருந்த
கோரராக்ஷஸிகள்
ஸீதையைச்
சூழ்ந்துகொண்டு
குரூரமான
வார்த்தைகளில்
அவளை
மிரட்டினார்கள்.
அவர்களுடைய
கர்ஜனைகள்
ஸீதையினிடத்தில்
பலிக்கவில்லை.
அவர்களுடைய
வார்த்தையை
அவள்
துரும்புபோல்
எண்ணினாள்.
பிறகு
அவர்கள்
வீணாய்க்
கத்தி
அலுத்துப்
போய்,
ராவணனுக்கு
ஸீதையின்
உறுதியான
நிச்சயத்தைத்
தெரிவிக்கப்
போனார்கள்.
அங்கிருந்தவர்கள்
அவளை
உட்படுத்துவோமென்ற
ஆசையற்று
ஸகல
பிரயத்தனங்களையும்
விட்டு
ஸீதையின்
நான்கு
பக்கங்களிலும்
படுத்துத்
தூங்கினார்கள்.
தன்
பர்த்தாவின்
க்ஷேமத்தையே
கோரும்
ஸீதை
துக்கம்
தாங்காமல்
தீனமாய்
பிரலாபித்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
அந்த
ராக்ஷஸிகளுக்கு
நடுவிலிருந்து
திரிஜடை
என்றவள்
எழுந்து,
‘துஷ்டைகளே!
ஸீதையைத்
தொடவேண்டாம்.
உங்களுக்குப்
பசித்தால்
உங்களையே
பிடுங்கித்
தின்னுங்கள்.
ஜனகருடைய
புத்திரியும்
தசரதருடைய
நாட்டுப்
பெண்ணுமான
ஜானகி
நாசமடையாள்.
இவளுடைய
பர்த்தாவிற்கு
ஜயமும்
மங்களங்களும்
உண்டாகப்போகின்றனவென்றும்
ராவணனும்
ஸகல
ராக்ஷஸர்களும்
நாசமடையப்போகிறார்களென்றும்
தெரிவிக்கும்
ஒரு
ஸ்வப்பனத்தைக்
கண்டேன்.
ராகவனுடைய
கோபத்திலிருந்து
ராக்ஷஸிகளைக்
காப்பாற்ற
இவள்
ஒருவளே
போதும்.
நாம்
இவளைப்
பிரார்த்திப்போம்.
இது
எனக்கு
நல்ல
யோசனை
என்று
தோன்றுகிறது.
இவள்
இப்பொழுது
அதிக
துக்கத்தை
அனுபவித்துக்
கொண்டிருக்கிறாள்.
ஆனால்
அதிசீக்கிரத்தில்
ஸகல
துக்கங்களும்
நீங்கி
உத்தமமான
ஸுகத்தையடைவாள்’
என்றாள்.
அதைக்
கேட்டு
ஸீதை,
தன்
நாயகனுக்குக்
கிடைக்கும்
ஜயத்தைப்பற்றி
ஸந்தோஷித்து,
‘நீ
சொல்வது
நிஜமானால்
நான்
உங்களை
ரக்ஷிக்கிறேன்’
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
அந்தப்
பயங்கரமான
ஸ்திதியிலிருப்பதைக்
கண்டு
நான்
அதை
நீக்குவதற்குப்
பலவிதமாய்
யோசித்தும்
ஒன்றும்
தோன்றாமல்
வருத்தப்பட்டுக்
கொண்டிருந்தேன்.
ஸீதையுடன்
இன்ன
விதமாகப்
பேசுகிறதென்று
நிச்சயித்துக்கொண்டு
இக்ஷ்வாகு
வம்ச
பரம்பரையை
வர்ணிக்க
ஆரம்பித்தேன்.
ராஜரிஷிகளால்
கொண்டாடப்பட்ட
அந்த
வார்த்தைகளைக்
கேட்டு
ஸீதை
கண்ணீர்
பெருக,
‘வானரசிரேஷ்ட!
நீ
யார்?
இங்கே
எப்படி
வந்தாய்?
எந்தக்
காரியமாய்
வந்தாய்?
ராகவனுக்கும்
உனக்கும்
பரிசயம்
உண்டான
விதமென்ன?’
என்று
கேட்டாள்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
நான்,
‘தங்களுடைய
பர்த்தாவான
ராமனுக்கு
ஸுக்ரீவனென்ற
ஒரு
மித்திரனுண்டு.
மஹாபலவான்,
பராக்கிரமசாலி,
நான்
அவருடைய
ஸேவகன்;
என்
பெயர்
ஹநுமான்.
அவர்
என்னைத்
தங்களிடத்தில்
அனுப்பியிருக்கிறார்.
அந்தப்
புருஷோத்தமன்
நம்பிக்கை
உண்டாகும்படி
தன்
மோதிரத்தை
அடையாளமாக
என்னிடத்தில்
கொடுத்தனுப்பியிருக்கிறார்.
ஆகையால்
தங்களுடைய
கட்டளையை
நிறைவேற்றத்
தயாராக
இருக்கிறேன்.
என்ன
செய்யட்டும்?
தங்களை
ராமலக்ஷ்மணர்களுடைய
ஸமீபத்தில்
கொண்டு
போய்
விடட்டுமா?
என்ன
பதில்
சொல்லுகிறீர்கள்?’
என்றேன்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
ஸீதை
என்
ஸ்வரூபத்தை
அறிந்து,
‘ராகவன்
ஸைன்யங்களுடன்
இங்கே
வந்து
ராவணனையும்
ஸகல
ராக்ஷஸர்களையும்
யுத்தத்தில்
கொன்று
என்னை
அழைத்துக்
கொண்டு
போகட்டும்’
என்றாள்.
பிறகு
நான்
அந்தப்
புண்யவதியை
சிரஸால்
நமஸ்கரித்து,
‘ராமனுக்கு
நம்பிக்கையையும்
ஸந்தோஷத்தையும்
உண்டாக்கும்
ஓர்
அடையாளத்தைக்
கொடுங்கள்’
என்று
கேட்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
தன்
சூடாமணியை
எடுத்து
என்னிடத்தில்
கொடுத்து,
‘இதை
ராமனுக்குக்
காட்டினால்
நீ
என்னைக்
கண்டு
பேசினாயென்று
நம்பிக்
கௌரவிப்பார்.
ஆஞ்ஜநேய!
என்
விருத்தாந்தங்களை
ராகவனுக்குத்
தெரிவிப்பாய்.
ராமலக்ஷ்மணர்களும்
ஸுக்ரீவனும்
வானர
ஸைன்யங்களுடன்
இங்கே
வரும்படி
செய்ய
வேண்டியது
உன்
கடமை.
அப்படியில்லாவிட்டால்
இரண்டு
மாதங்களுக்கு
மேல்
பிழைத்திருக்கமாட்டேன்.
ராமன்
என்னைப்
பார்க்கமுடியாது.
அநாதையைப்போல்
மரணமடைவேன்’
என்று
தன்
அபிப்பிராயத்தை
முடிவாகச்
சொன்னாள்.
Prose passage
▾
Meaning
Keep
அந்தத்
தீனமான
வார்த்தையைக்
கேட்டு
எனக்குத்
தேகம்
தெரியாமல்
கோபம்
வந்தது.
மேல்
நடக்கவேண்டிய
காரியம்
கொஞ்சம்
பாக்கியிருக்கிறதென்று
அறிந்து,
மலைபோன்ற
ரூபத்தை
எடுத்துக்கொண்டு,
ராக்ஷஸர்களுடன்
யுத்தம்
செய்ய
விரும்பி,
அந்த
அசோகவனத்தை
அழித்தேன்.
Prose passage
▾
Meaning
Keep
மரங்கள்
முறிக்கப்படுவதையும்
மிருகங்களும்
பக்ஷிகளும்
பயத்தால்
கூச்சலிடுவதையும்கேட்டு
ராக்ஷஸிகள்
விழித்துக்கொண்டு,
அங்கே
வந்து
பார்த்து
என்னைக்
கண்டு
சீக்கிரமாய்
ராவணனிடத்தில்
போய்ச்
சொன்னார்கள்.
‘பிரபோ!
தங்களுடைய
பலபராக்கிரமங்களை
அறியாமல்
ஒரு
துஷ்டக்
குரங்கு
இங்கே
வந்து
பிறர்
நெருங்க
முடியாத
நமது
அசோகவனத்தை
அழிக்கிறது.
அந்தத்
துர்புத்தியுள்ள
வானரன்
தங்களுக்குப்
பிரியமில்லாத
காரியத்தைச்
செய்து
கொண்டிருக்கிறான்.
அவனைக்
கொல்லும்படி
கட்டளையிடுங்கள்’
என்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
ராவணன்
கிங்கரர்களென்று
பிரஸித்தி
பெற்ற
ராக்ஷஸர்களை
அனுப்பினான்.
அவர்கள்
லங்காதிபதியின்
எண்ணங்களை
அறிந்து
நடப்பவர்கள்;
ஸுலபமாய்
ஜயிக்கமுடியாதவர்கள்;
ஸமஸ்த
ஆயுதங்களையும்
எடுத்துக்கொண்டு
என்னுடன்
யுத்தம்
செய்யவந்த
எண்பதினாயிரம்
கிங்கரர்களையும்
அங்கிருந்த
ஒரு
இருப்புத்
தடியால்
கொன்றேன்.
அதில்
பயந்து
ஓடினவர்கள்
அந்த
ஸமாசாரத்தை
ராவணனிடத்தில்
சொன்னார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
அப்பட்டணத்தின்
நடுவிலிருந்த
ஒரு
உன்னதமான
உப்பரிகையில்
தாவி
ஒரு
ஸ்தம்பத்தைப்
பிடுங்கிக்கொண்டு,
அங்கிருந்த
அரக்கர்களைக்
கொன்று,
லங்கைக்குப்
பூஷணமாயிருந்த
அந்தக்
கட்டடத்தை
நாசம்
செய்தேன்
பிறகு,
ராவணன்,
பிரஹஸ்தனுடைய
புத்திரனான
ஜம்புமாலியையும்
பயங்கரமான
அநேக
ராக்ஷஸர்களையும்
அவனுடன்
அனுப்பினான்.
யுத்தத்தில்
நிபுணனான
அந்தப்
பலவானையும்
அவனுடன்
வந்த
ராக்ஷஸர்களையும்
ஒரு
இருப்புலக்கையால்
அடித்துக்
கொன்றேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
ராவணன்
மஹாபலசாலிகளான
ஏழு
மந்திரி
புத்திரர்களைக்
கணக்கற்ற
காலாட்களுடன்
அனுப்பினான்.
அவர்களையும்
இருப்புலக்கையால்
யமலோகத்திற்கு
அனுப்பினேன்.
பிறகு,
சூரர்களான
ஐந்து
ஸேனாதிபதிகளை
அனுப்பினான்.
அவர்களை
ஸைன்யங்களுடன்
இருந்த
இடம்
தெரியாமல்
கொன்றேன்.
பிறகு
தன்
புத்திரனான
அக்ஷனென்ற
பலவானை
அளவற்ற
ஸைன்யங்களுடன்
அனுப்பினான்.
யுத்தத்தில்
நிபுணனான
அந்த
மந்தோதரி
புத்திரன்
முடிவில்
கத்தியை
உருவிக்கொண்டு
ஆகாசத்தில்
கிளம்புவதைக்
கண்டு,
அவனுடைய
கால்களைப்
பிடித்துக்
கரகர
என்று
சுழற்றி
பூமியில்
அடித்துக்
கொன்றேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
ராவணன்
கோபம்
கொண்டு,
பலத்தாலும்
பராக்கிரமத்தாலும்
கொழுப்படைந்த
இந்திரஜித்
என்ற
தன்
புத்திரனை
அனுப்பினான்.
அவனுடைய
ஸைன்யம்
முழுவதையும்
கொன்று,
அவனுடைய
பராக்கிரமத்தை
வீணாகச்
செய்து,
வெகு
ஸந்தோஷமடைந்தேன்.
கொழுப்படைந்த
வீரர்களுடன்
அந்த
இந்திரஜித்தை
ராவணன்
பூர்ண
நம்பிக்கையுடன்
என்னுடன்
யுத்தம்
செய்ய
அனுப்பினான்.
தன்
பலம்
ஒடுங்கினதையும்
அஸ்திரங்களாலும்
ஆயுதங்களாலும்
என்னை
ஜயிக்கமுடியாதென்றதையும்
கண்டு,
அந்த
ராக்ஷஸன்
அதிவேகமாய்
என்மேல்
பிரஹ்மாஸ்திரத்தைப்
பிரயோகம்
செய்து
என்னைக்
கட்டினான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ராக்ஷஸர்கள்
என்னைக்
கயிறுகளால்
கட்டி
ராவணனிடத்தில்
கொண்டு
போனார்கள்.
அவன்
என்னைப்
பார்த்து
நான்
லங்கைக்கு
வந்ததற்கும்
ராக்ஷஸர்களைக்
கொன்றதற்கும்
காரணத்தைக்
கேட்டான்.
Prose passage
▾
Meaning
Keep
‘ஸீதையின்
நிமித்தமாய்
இப்படிச்
செய்தேன்’
என்று
சொன்னேன்.
‘நான்
வாயுவின்
புத்திரன்;
என்
பெயர்
ஹநுமான்.
ஸீதையைப்
பார்க்க
விரும்பி
தங்களுடைய
அரண்மனைக்கு
வந்தேன்.
நான்
வானரன்;
ஸுக்ரீவனுக்கு
மந்திரி;
ராமனால்
அனுப்பப்பட்ட
தூதன்;
தங்களிடத்திற்கு
வந்தேன்.
மஹா
தேஜஸ்வியான
ஸுக்ரீவன்
தங்களை
க்ஷேமம்
விசாரித்து,
புருஷார்த்தங்களுக்கு
ஒத்ததும்
க்ஷேமகரமுமான
பின்வரும்
ஸமாசாரத்தைச்
சொல்லி
அனுப்பியிருக்கிறார்.
‘ரிசியமூகபர்வதத்தில்
நான்
வஸித்துக்கொண்டிருக்கையில்
ரணதீரனான
ராகவன்
எனக்கு
மித்திரனாய்,
‘என்
பாரியையை
ராக்ஷஸன்
கொண்டு
போய்
விட்டான்.
அவளைத்
திரும்பி
அடையும்
விஷயத்தில்
நீ
எனக்கு
ஸஹாயம்
செய்யவேண்டியது’
என்று
கேட்டார்.
‘அப்படியானால்
என்
சத்துருவான
வாலியைக்
கொல்வதில்
தாங்களும்
ஸஹாயம்
செய்யவேண்டும்’
என்றேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ராமலக்ஷ்மணர்கள்
அக்னிஸாக்ஷியாய்
என்னுடன்
ஸ்நேகம்
செய்தார்கள்.
ராமன்
வாலியை
யுத்தத்தில்
ஒரே
பாணத்தால்
கொன்று,
என்னை
வானர
வீரர்களுக்கு
அரசனாக
அபிஷேகம்
செய்தார்.
அவருக்கு
ஸகல
விதத்தாலும்
நான்
ஸஹாயம்
செய்யவேண்டியது.
ஆகையால்
என்
தூதனை
உன்னிடத்திற்கு
அனுப்பி
இருக்கிறேன்.
உடனே
ஸீதையைக்
கொண்டு
வந்துவிடு.
இல்லாவிட்டால்
வானர
வீரர்கள்
உன்
ஸைன்யங்களை
அழித்துவிடுவார்கள்.
தேவர்கள்
அடிக்கடி
ஸஹாயத்திற்காகப்
பிரார்த்தித்து
அழைத்துக்
கொண்டு
போகும்
வானரர்களுடைய
மஹிமை
யாருக்குத்தான்
தெரியாது’
என்று
ஸுக்ரீவ
மஹாராஜா
தங்களுக்குச்
சொல்லி
அனுப்பியிருக்கிறார்’
என்றேன்.
அதைக்
கேட்டு
ராவணன்
கோபத்தால்
மெய்மறந்து
என்னை
எரித்து
விடுபவன்போல்
பார்த்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அந்தத்
துஷ்டன்
என்
மஹிமையை
அறியாமல்,
‘இவனைக்
கொன்றுவிடுங்கள்’
என்று
ஆக்ஞாபித்தான்.
அப்பொழுது
அவனுக்குத்
தம்பியான
விபீஷணன்,
மஹாபுத்திமான்,
ராவணனைப்
பார்த்து,
‘அண்ணா!
இது
நியாயமல்ல;
இப்படிச்
செய்யக்கூடாது;
இது
ராஜ
நீதிக்கு
விரோதம்.
தூதர்களைக்
கொல்லக்கூடாதென்று
சாஸ்திரங்கள்
விதிக்கின்றன.
யஜமானனுடைய
க்ஷேமத்தைக்
கோருகிற
தூதன்
தன்னிடத்தில்
ஒப்புவிக்கப்பட்ட
ஸமாசாரத்தைச்
சொல்ல
வேண்டியதல்லவா?
அவன்
விசேஷ
அபராதம்
செய்தாலும்
அவனுடைய
ரூபத்தைக்
கெடுக்கவேண்டுமே
தவிர
கொல்லக்கூடாதென்பது
நீதி
சாஸ்திரம்’
என்று
பிரார்த்தித்தான்.
இப்படி
எனக்காகப்
பரிந்து
பேசின
விபீஷணனுடைய
வார்த்தையை
அங்கீகரித்து
ராவணன்,
‘இந்தக்
குரங்கின்
வாலைக்
கொளுத்திவிடுங்கள்’
என்று
கட்டளையிட்டான்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
அங்கிருந்த
குரூர
ராக்ஷஸர்கள்
என்னைக்
கழிகளாலும்
முஷ்டிகளாலும்
அடித்து,
என்
வாலில்
சணல்
கயிறுகளையும்
வஸ்திரங்களையும்
சுற்றித்
தைலத்தில்
நனைத்து
நெருப்பு
வைத்து
பிறகு
என்னை
ராஜமார்க்கங்களிலும்
மற்ற
வீதிகளிலும்
கட்டி
இழுத்துக்கொண்டு
ஜயகோஷத்துடன்
சென்றார்கள்.
நான்
என்
பெரிய
ரூபத்தைச்
சுருக்கிக்
கட்டுகளிலிருந்து
விடுவித்துக்கொண்டு,
பழைய
ரூபத்துடன்
இருப்புலக்கையால்
அவர்களைக்
கொன்றேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அந்த
நகரத்
துவாரத்திற்குச்
சென்று,
பிரளயகாலாக்னி
பிராணிகளைக்
கொளுத்துவதுபோல்
வாலிலிருந்த
நெருப்பால்
அமரிக்கையாய்
லங்கை
முழுவதையும்
கொளுத்திவிட்டேன்.
ஓரிடம்
பாக்கியில்லாமல்
வெந்து
சாம்பலாயிற்று.
உடனே,
‘ஐயோ!
புத்தியில்லாமல்
லங்கையில்
நெருப்பு
வைத்து
ஸீதையையும்
கொளுத்தி
ராகவனுடைய
முக்கிய
காரியத்தைக்
கெடுத்துவிட்டேனே’
என்று
சொல்ல
முடியாத
துக்கத்தை
அனுபவிக்கையில்,
சாரணர்கள்,
‘லங்கையில்
ஓரிடம்
பாக்கியில்லாமல்
வெந்துபோயும்
ஸீதை
அபாயமில்லாமலிருப்பது
என்ன
ஆச்சரியம்’
என்று
சொல்லிக்கொள்வதைக்
கேட்டேன்.
மேலும்
என்
வாலில்
எரியும்
நெருப்பு
பனிபோல்
குளிர்ந்திருந்தது;
என்
மனத்தில்
கொஞ்சம்கூட
துக்கமில்லை;
காற்று
பரிமளமாய்
வீசிற்று;
கண்
சுபமாய்த்
துடித்தது.
Prose passage
▾
Meaning
Keep
மகரிஷிகளின்
வார்த்தைகள்
வீண்
போகாதாகையால்
ஸீதைக்கு
அபாயமில்லை
என்று
ஸந்தோஷித்து,
மறுபடியும்
அவளைத்
தரிசித்து
உத்தரவு
பெற்றுக்கொண்டு,
அரிஷ்டமென்ற
பர்வதத்தில்
ஏறி
உங்களைப்
பார்க்க
ஆசை
கொண்டு
ஆகாசத்தில்
கிளம்பினேன்.
வாயு,
சந்திரன்,
ஸூரியன்,
ஸித்த,
கந்தர்வ
கணங்கள்
ஸஞ்சரிக்கும்
ஆகாச
மார்க்கமாய்
இங்கே
வந்து
உங்களைக்
கண்டேன்.
ராகவனுடைய
மஹிமையாலும்
உங்களுடைய
பிரபாவத்தாலும்
ஸுக்ரீவன்
கட்டளையிட்ட
ஸகல
காரியங்களையும்
என்னால்
கூடிய
வரையில்
செய்து
முடித்தேன்.
மேல்
நடக்கவேண்டியவைகளை
நீங்களே
செய்து
முடிக்க
வேண்டியது.
159
▾
Meaning
Keep
ஏதத்
ஸர்வம்
மயா
தத்ர
யதாவ
து³பபாதி³தம்
|
அத்ர
யந்
ந
க்ருதம்
ஶேஷம்
தத்ஸர்வம்
க்ரியதாமிதி
||
Previous
←
மாருதி திரும்பி வந்தது
Next
மாருதி வானரர்களுடன் ஆலோசித்தது
→