Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி வானரர்களுடன் ஆலோசித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
வானரர்களுடன்
ஆலோசித்தது
1
▾
Meaning
Keep
ஏததா³க்²யாய
தத்ஸர்வம்
ஹநுமாந்
மாருதாத்மஜ:
|
பூ⁴ய:
ஸமுபசக்ராம
வசநம்
வக்து
முத்தரம்
||
Prose passage
▾
Meaning
Keep
நாமெல்லோரும்
இப்பொழுதே
லங்கைக்குச்
சென்று
ராவணனை
ஜயித்து
ஸீதையுடன்
ராமலக்ஷ்மணர்களைப்
பார்ப்போம்
என்று
நீங்கள்
சொல்லலாம்.
ஆனால்,
ராகவனுடைய
பிரயத்தனங்களும்
ஸுக்ரீவனுடைய
உத்ஸாகமும்
ஸீதையின்
பதிவிரதா
மஹிமையால்
நிறைவேறிற்றே
தவிர
வேறல்ல.
அவளிடத்தில்
என்
மனம்
எல்லையற்ற
பக்தியுடன்
இருக்கிறது.
‘அப்படிப்பட்ட
பிரபாவத்தையுடைய
ஸீதையைத்
தொட்டெடுத்தும்
ராவணன்
இன்னும்
எப்படிப்
பிழைத்திருக்கிறான்’
என்றால்,
அந்த
ராக்ஷஸ
ராஜன்
கடுந்தவம்
செய்து
அளவற்ற
பலத்தையும்
பராக்கிரமத்தையும்
தேஜஸையும்
பெற்றிருக்கிறான்.
ஸகல
லோகங்களையும்
ரக்ஷிக்கக்கூடியவன்;
கோபம்
கொண்டால்
அவைகளை
நாசம்
செய்யக்
கூடியவனாகையால்
ஸீதையைத்
தொட்டும்
அவன்
சாம்பலாகவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்,
ஸீதையின்
பதிவிரதாமஹிமை
பலமற்றதென்று
எண்ணவேண்டாம்.
ஸீதை
கொஞ்சம்
கோபித்தால்
பிரளயகாலாக்னியும்
அதற்கு
ஈடோ?
நாயகன்
இருக்கும்பொழுது
அவருடைய
உத்தரவில்லாமல்
தான்
ஒன்றையும்
செய்யக்கூடாது.
ராவணனை
ஜயித்துக்
கொன்றாரென்ற
கீர்த்தி
தன்
பர்த்தாவிற்குக்
கிடைக்கவேண்டும்.
அதைக்
கெடுக்கக்கூடாதென்று
ஸகல
கஷ்டங்களையும்
பொறுத்திருப்பதே
தவிர
வேறென்ன?
Prose passage
▾
Meaning
Keep
நடந்த
காரியங்களைத்
தங்களுக்குத்
தெரிவித்தேன்.
ஜாம்பவானும்
மற்றப்
பெரியோர்களும்
நாம்
ஸீதையுடன்
ராமலக்ஷ்மணர்களைப்
பார்க்கவேண்டியதென்று
முடிவு
செய்தால்
எனக்கு
ஆக்ஷேபமில்லை.
நானொருவனே
லங்கையையும்
ராவணனையும்
ஸகல
ராக்ஷஸர்களையும்
ஒரு
க்ஷணத்தில்
நாசம்
செய்வேன்.
நீங்கள்
சூரர்கள்;
பலசாலிகள்;
தைர்யவான்கள்;
ஆயுதப்
பிரயோகங்களில்
நிபுணர்கள்;
ஜயிக்க
நிச்சயித்தவர்கள்;
நானும்
உங்களுடன்
சேர்ந்தால்
கேட்கவேண்டுமோ?
நானொருவனே
ராவணனையும்
அவனுடைய
ஸஹோதரர்களையும்
புத்திரர்களையும்
ஸேவகர்களையும்
ஸைன்யங்களையும்
விளையாட்டாய்க்
கொல்லமுடியும்.
Prose passage
▾
Meaning
Keep
இந்திரஜித்
பிரயோகிக்கும்
பிறர்
கண்ணெடுத்துப்
பார்க்கமுடியாத
பிரஹ்மாஸ்திரம்
இந்திராஸ்திரம்
வாயவ்யாஸ்திரம்
வருணாஸ்திரம்
முதலியவைகளைப்
பொடியாக்குவேன்.
என்
பராக்கிரமத்தால்
இந்திரஜித்தை
மயக்குவேன்.
நான்
இடைவிடாமல்
கல்மாரி
பொழிய
ஆரம்பித்தால்
தேவர்களையும்
கொல்வேன்.
ராக்ஷஸர்களைப்பற்றிச்
சொல்லவும்
வேண்டுமோ?
நீங்கள்
உத்தரவு
கொடுத்தால்
அவர்களைக்
கொல்வது
எனக்கு
ஒரு
விளையாட்டு.
Prose passage
▾
Meaning
Keep
ஸமுத்திரம்
கரைபுரண்டாலும்
மேருமலை
அசைந்தாலும்
ஜாம்பவானை
யுத்தத்தில்
அசைக்கக்கூடிய
சத்ருஸைன்யம்
உண்டோ?
ஸமஸ்த
ராக்ஷஸர்களுக்குள்
சிரேஷ்டமான
வீரர்களை
வாலி
புத்திரன்
ஒருவனே
நாசம்
செய்ய
முடியாதா?
பனஸன்
நீலன்
என்றவர்களுடைய
துடைகளின்
வேகத்தால்
மேருமலையும்
பிளவுபடுமே;
மந்தரகிரியும்
பொடியாகுமே;
ராக்ஷஸர்கள்
எம்மாத்திரம்?
மைந்தன்
த்விவிதன்
என்றவர்களோடு
யுத்தம்
செய்யக்கூடிய
தேவ,
அஸுர,
யக்ஷ,
கந்தர்வ,
உரக,
பக்ஷிகணங்களைக்
காட்டுங்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இவர்கள்
அசுவினீ
புத்திரர்கள்.
அளவற்ற
பிரபாவமுடையவர்கள்.
இவர்களுடன்
ஸமமாய்
யுத்தம்
செய்யக்
கூடியவர்களும்
உண்டோ?
பிரஹ்மாவின்
வரத்தால்
அளவற்ற
பலமடைந்தவர்கள்;
அமிருதபானம்
செய்தவர்கள்.
முன்பு
அசுவினீ
தேவதைகளை
ஸந்தோஷப்படுத்துவதற்காக
பிரஹ்மா,
‘இவர்கள்
ஒருவராலும்
மரணமடையார்கள்’
என்ற
வரத்தைக்
கொடுத்தார்.
அந்தக்
காரணத்தால்
கொழுப்படைந்து,
பெரிய
ஸைன்யத்தை
நாசம்
செய்து
தேவர்கள்
வைத்திருந்த
அமிருதத்தைப்
பானம்
செய்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
நீங்கள்
எல்லோரும்
இருங்கள்.
இவ்விருவரே
கோபம்
கொண்டால்
லங்கையையும்
அதிலுள்ள
ஸமஸ்த
பிராணிகளையும்
நாசம்
செய்வார்களே!
நான்
இதுவரையிலுமே
லங்கா
தேவதையை
ஜயித்து,
அந்த
நகரத்தைக்
கொளுத்திச்
சாம்பலாக்கி,
ராஜமார்க்கங்களில்
என்
பெயரையும்
ராம
லக்ஷ்மணர்கள்
பெயரையும்
பிரஸித்தப்படுத்தினேன்.
‘ராகவனுக்கும்
லக்ஷ்மணனுக்கும்
அவர்களால்
காப்பாற்றப்பட்ட
ஸுக்ரீவனுக்கும்
பலத்திலும்,
பராக்கிரமத்திலும்
நிகருண்டோ?’
என்று
கர்ஜித்தேன்.
‘நான்
கோஸலாதிபதியான
ரகுவீரனுடைய
தூதன்
என்
பெயர்
ஹநுமான்;
நான்
வாயுவின்
புத்திரன்’
என்று
எல்லோரும்
கேட்கும்படி
கோஷித்தேன்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனுடைய
அசோகவனத்தில்
சிம்சுபா
விருக்ஷத்தின்
அடியில்
ஜனகராஜபுத்திரி
தீனமாக
உட்கார்ந்திருக்கிறாள்.
மேகங்களால்
சூழப்பட்ட
சந்திரனைப்போல்
காந்தியற்று,
ராக்ஷஸிகளால்
சூழப்பட்டுச்
சோக
ஸாகரத்தில்
மூழ்கி,
வெறுந்தரையில்
உட்கார்ந்திருக்கிறாள்.
பலத்தால்
கொழுப்படைந்த
ராவணனைக்
கொஞ்சமாவது
லக்ஷ்யம்
செய்யவில்லை.
ரூபத்தில்
நிகரில்லாத
அந்தப்
பதிவிரதை
ராவணனால்
சிறையில்
வைக்கப்பட்டு,
ஜனகராஜ
புத்திரியாயும்
ஸகல
மங்களங்களுக்கும்
வாஸஸ்தானமாயும்
இருந்தும்,
இந்திரனைப்
பிரிந்த
இந்திராணியைப்போல்
தன்
பர்த்தாவையே
தியானித்துக்கொண்டு,
அவரிடத்திலேயே
ஸகல
ஆசைகளையும்
வைத்து,
ஒற்றை
வஸ்திரத்துடன்
தேகமெங்கும்
அழுக்கடைந்து
சோகத்தால்
வாடி
மெலிந்து,
‘என்
நாதனுக்கு
எப்பொழுது
ஜயமுண்டாகும்?
எப்பொழுது
ராவணனை
ஸம்ஹரிப்பார்?
எப்பொழுது
என்
துக்கம்
தீரும்?’
என்று
ஆவலுடன்
எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறாள்.
Prose passage
▾
Meaning
Keep
அசோகவனத்தில்
கோரமான
ராக்ஷஸிகள்
அவளை
அடிக்கடி
மிரட்டுவதைப்
பார்த்தேன்.
ஒரே
பின்னலுடன்
ஸந்தோஷமற்று,
ராமனிடத்தில்
நாடிய
மனமுடையவளாய்,
வர்ணம்
மாறி,
தரையில்
படுத்துக்கொண்டு,
ஹேமந்தருதுவில்
வாடி
விகாரமடைந்த
தாமரையோடையைப்போல்
காணப்படுகிறாள்.
ராவணன்
எவ்வளவு
பிரார்த்தித்தும்
அவனிடத்தில்
கொஞ்சம்கூட
மனம்
வைக்காமல்
உயிரை
விட
நிச்சயித்து,
மான்
குட்டியைப்போல்
மிரண்ட
கண்களுடன்
நான்கு
புறத்திலும்
பார்த்துக்கொண்டிருப்பதை
நான்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
வெகு
கஷ்டப்பட்டு
அவளுக்கு
என்னிடத்தில்
நம்பிக்கை
வரும்படி
செய்து,
அவளுடன்
பேசி
ஸகல
விருத்தாந்தங்களையும்
சொன்னேன்.
ராகவனுக்கும்
ஸுக்ரீவனுக்கும்
ஏற்பட்ட
ஸ்நேகத்தைக்
கேள்விப்பட்டு
மிகவும்
ஸந்தோஷித்தாள்.
ராமனிடத்தில்
விசேஷ
பக்தி
வைத்திருப்பதாலும்,
தன்
பதிவிரதா
தர்மத்திற்குக்
குறைவு
வருமென்பதாலும்
மஹாபராதம்
செய்த
ராவணனைக்
கொல்லாமலிருக்கிறாள்.
அது
ராவணன்
செய்த
புண்ணியமே.
ஆகையால்
ராகவனே
அவனைக்
கொல்லக்
கடவர்.
ஸீதை
கேவலம்
அதற்கு
நிமித்தமே.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனுடைய
பராக்கிரமத்தையும்
தவத்தையும்
வரங்களையும்
யோசித்தால்,
ஸீதையைக்
காரணமாகக்
கொண்டு
ராகவன்
அவனைக்
கொல்ல
வேண்டும்.
ஸ்வபாவத்திலேயே
மெல்லிய
தேகமுடைய
ஸீதை
ராமனைப்
பிரிந்ததால்,
பிரதமையில்
அத்யயனம்
செய்பவனுடைய
வித்தையைப்போல்
இளைத்திருக்கிறாள்.
இப்படி
ஸீதை
படும்
கஷ்டங்களை
என்னால்
கூடியவரையில்
தெரிவித்தேன்.
இதற்கு
எப்படிப்
பதில்
செய்யவேண்டுமோ
அதைக்
குறைவில்லாமல்
செய்வது
உங்களைச்
சேர்ந்தது”
என்றார்.
35
▾
Meaning
Keep
ஏவமாஸ்தே
மஹாபா⁴கா³
ஸீதா
ஶோகபராயணா
|
யத³த்ர
ப்ரதிகர்தவ்யம்
தத்ஸர்வ
முபபத்³யதாம்
||
Previous
←
மாருதி தன் யாத்திரையை வர்ணித்தது
Next
அங்கதனுடைய யோசனை
→