Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · வானரர்கள் மதுவனத்தில் பிரவேசித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
வானரர்கள்
மதுவனத்தில்
பிரவேசித்தது
1
▾
Meaning
Keep
ததோ
ஜாம்ப³வதோ
வாக்ய
மக்³ருஹ்ணந்த
வநௌகஸ:
|
அங்க³த³ப்ரமுகா²
வீரா
ஹநூமாம்ஶ்ச
மஹாகபி:
||
Prose passage
▾
Meaning
Keep
அங்கதனும்
மற்ற
வானரர்களும்
ஹநுமானும்,
ஜாம்பவானுடைய
வார்த்தையை
யுக்தமென்று
அங்கீகரித்தார்கள்.
பிறகு
ஸகல
வானரர்களும்
ஹநுமானை
முன்னிட்டுக்கொண்டு
வெகு
ஸந்தோஷத்துடன்
மஹேந்திர
பர்வதத்திலிருந்து
கிளம்பி
ஆகாசமார்க்கமாய்ச்
சென்றார்கள்.
பெரிய
சரீரங்களுடன்
அளவற்ற
பலத்துடனும்
மேருமந்தரமென்ற
பர்வதங்களைப்
போலும்
மதயானைகளைப்
போலும்
ஆகாசத்தை
மறைத்துக்கொண்டு,
பலத்தாலும்
தைரியத்தாலும்
வேகத்தாலும்
ஸமஸ்த
பிராணிகளால்
கொண்டாடப்பட்ட
மாருதியைத்
தங்களுடைய
பிரியமான
பார்வைகளால்
சுமந்து
போவதுபோல்
சென்றார்கள்.
ராகவனுக்கு
ஜயத்தையும்
கீர்த்தியையும்
செய்ய
நிச்சயித்தவர்கள்;
தாங்கள்
உத்தேசித்த
பிரயோஜனம்
கைகூடினதால்
பெருமை
கொண்டவர்கள்;
ராகவனிடத்தில்
ஸந்தோஷ
ஸமாசாரத்தைச்
சொல்ல
ஆவல்
கொண்டவர்கள்;
ராக்ஷஸர்களுடன்
எப்பொழுது
யுத்தம்
நேருமென்று
கைகளைத்
தீட்டிக்
கொண்டிருப்பவர்கள்;
ராகவன்
ஸுக்ரீவனுக்குச்
செய்த
உபகாரத்திற்கு
பிரத்யுபகாரம்
செய்ய
நிச்சயித்தவர்கள்;
விசாலமான
மனத்தையுடையவர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
வெகுதூரம்
சென்று,
நந்தனமென்ற
இந்திரனுடைய
வனத்திற்கு
ஸமமாய்,
மரங்களாலும்
கொடிகளாலும்
விளங்கும்
ஒரு
வனத்திற்கு
வந்தார்கள்.
அது
ஸகலப்
பிராணிகளும்
கண்டு
ஆசைப்படக்கூடியது;
எவரும்
நெருங்க
முடியாதது;
ஸுக்ரீவனால்
நன்றாகக்
காப்பாற்றப்பட்டது;
அந்த
மதுவனத்தை
ஸுக்ரீவனுக்கு
மாமனான
ததிமுகனென்ற
வானரவீரன்
வெகுஜாக்கிரதையாய்
எப்பொழுதும்
ரக்ஷித்து
வந்தான்.
அதைக்
கண்டு
வானரக்
கூட்டங்கள்
மிகுந்த
உத்ஸாகத்தையடைந்து,
“இங்கிருக்கும்
தேனைக்
குடிக்கும்படி
எங்களுக்கு
உத்தரவு
செய்யவேண்டும்”
என்று
அங்கதனைப்
பிரார்த்தித்தார்கள்.
அவனும்
ஜாம்பவான்
முதலிய
பெரியோர்களைக்
கலந்து
யோசித்து,
“நீங்கள்
இஷ்டப்படி
இங்கிருக்கும்
தேனைக்
குடியுங்கள்”
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்ட
வானரர்கள்
அங்கதனால்
அனுமதி
கொடுத்து
ஏவப்பட்டதால்
குதித்தார்கள்;
சிலர்
பாடினார்கள்;
சிலர்
ஆடினார்கள்;
சிலர்
விழுந்தார்கள்;
சிலர்
நமஸ்கரித்தார்கள்;
சிலர்
திரிந்தார்கள்;
சிலர்
சிரித்தார்கள்;
சிலர்
தாவினார்கள்;
சிலர்
பிதற்றினார்கள்;
சிலர்
ஒருவரையொருவர்
கட்டிக்கொண்டார்கள்;
சிலர்
ஒருவர்மேலொருவர்
பாய்ந்தார்கள்;
சிலர்
அந்யோந்யமாய்ப்
பேசிக்கொண்டிருந்தார்கள்;
சிலர்
ஒருவரோடொருவர்
விளையாடிக்
கொண்டிருந்தார்கள்;
சிலர்
மரத்திற்கு
மரம்
தாவினார்கள்;
சிலர்
மரங்களின்
நுனியிலிருந்து
பூமியில்
விழுந்தார்கள்;
சிலர்
பூமியிலிருந்து
வெகுவேகமாய்
மரங்களின்
நுனியில்
தாவினார்கள்;
ஒருவன்
பாடிக்கொண்டிருக்கையில்
வேறொருவன்
சிரித்துக்கொண்டு
அவனிடத்தில்
போனான்;
சிரித்துக்கொண்டிருப்பவனிடத்தில்
வேறொருவன்
அழுதுகொண்டு
போனான்;
அவனிடத்தில்
வேறொருவன்
அதிகாரம்
செய்துகொண்டு
போனான்;
அவனைப்
பார்த்து
வேறொருவன்
இரைந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
தேனைக்
குடித்துக்
கொழுப்படைந்து
தேகம்
தெரியாமல்
அந்த
வானர
ஸைன்யம்
வனத்தில்
பரவிற்று.
அதில்
மதுபானத்தால்
மயங்காதவனாவது
திருப்தியடையாதவனாவது
கிடையாது.
அவர்கள்
மரங்களை
முறித்து
இலைகளை
உதிர்த்து
புஷ்பங்களைப்
பறித்து
மதுவைக்
குடித்து
வனத்தை
அழிப்பதை
ததிமுகன்
பார்த்துக்
கோபம்
கொண்டு
தடுத்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பெரிய
வானர
வீரர்கள்
அவனை
மிரட்ட,
மஹாப்
பிரதாபமுள்ளவனாகையால்
அந்த
வனத்தை
ரக்ஷிக்க
விரும்பி
சிலரை
நல்ல
வார்த்தையாலும்
சிலரைக்
கடும்
சொற்களாலும்
சிலரைக்
கலகத்தாலும்
சிலரை
அடிப்பதாலும்
தடுத்துப்
பார்த்தான்.
அதைக்
கண்டு
வானரர்கள்
பலத்தாலும்
கொழுப்பாலும்
குடியாலும்
ஸுக்ரீவனிடத்திலுள்ள
பயத்தை
மறந்து
ததிமுகனைச்
சூழ்ந்துகொண்டு
அவன்
யஜமானனுடைய
மாமன்
என்பதையும்
அவனை
எதிர்ப்பது
குற்றமென்பதையும்
லக்ஷ்யம்
செய்யாமல்
அவனைத்
திட்டி
அவமானப்படுத்தி,
அங்குமிங்கும்
இழுத்து,
நகங்களால்
கீறிப்
பற்களால்
கடித்துக்
கைகளால்
அறைந்து
கால்களால்
உதைத்து,
அந்த
மஹாவனத்தைப்
பாழாக்கினார்கள்.
25
▾
Meaning
Keep
நகை²ஸ்துத³ந்தோ
த³ஶநைர்
த³ஶந்த:
தலைஶ்ச
பாதை³ஶ்ச
ஸமாபயந்த:
|
மதா³த்
கபிம்
தம்
கபய:
ஸமக்³ரா:
மஹாவநம்
நிர்விஷயம்
ச
சக்ரு:
Previous
←
அங்கதனுடைய யோசனை
Next
வானரர்கள் மதுவனத்தை அழித்தது
→