Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · வானரர்கள் மதுவனத்தை அழித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
வானரர்கள்
மதுவனத்தை
அழித்தது
1
▾
Meaning
Keep
தாநுவாச
ஹரிஶ்ரேஷ்டோ²
ஹநுமாந்
வாநரர்ஷப⁴:
|
அவ்யக்³ர
மநஸோ
யூயம்
மது⁴
ஸேவத
வாநரா:
||
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஹநுமான்,
“வானரர்களே!
நீங்கள்
கவலைப்படாமல்
யதேச்சையாய்த்
தேனைக்
குடியுங்கள்.
உங்களைத்
தடுப்பவர்களை
நான்
பார்த்துக்கொள்கிறேன்”
என்றார்.
பிறகு
அங்கதன்
வெகு
ஸந்தோஷத்துடன்,
“ஸ்நேகிதர்களே!
இஷ்டப்படி
தேனைக்
குடியுங்கள்.
நமது
காரியத்தை
நிறைவேற்றி
வந்த
மாருதி
சொல்லும்
வார்த்தை
அயுக்தமாயிருந்தாலும்
அதை
நாம்
கட்டாயம்
நிறைவேற்ற
வேண்டியது.
இந்த
விஷயத்தில்
கேட்கவேண்டுமோ?”
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
வானரர்களெல்லோரும்
அந்த
வார்த்தையை
“நல்லது
நல்லது”
என்று
கொண்டாடி
நதீப்பிரவாகத்தைப்போல்
சீக்கிரமாய்
மதுவனத்தில்
பிரவேசித்தார்கள்.
அவர்கள்
ஹநுமானைப்
பார்த்ததாலும்
ஸீதையின்
க்ஷேமத்தைக்
கேட்டதாலும்
அங்கதன்
உத்தரவு
கொடுத்ததாலும்
இறுமாப்படைந்து,
அங்கிருந்த
காவற்காரர்களை
லக்ஷ்யம்
செய்யாமல்
பழங்களைப்
பறித்துத்
தின்று
தேனைக்
குடித்தார்கள்.
காவலர்கள்
தடுத்தபொழுது
எல்லோரும்
ஒன்று
சேர்ந்து
அவர்களை
அடித்துத்
துரத்தினார்கள்.
சிலர்
தொன்னைகளில்
தேனைக்
குடித்தார்கள்.
சிலர்
தேனை
வாரி
எறிந்தார்கள்;
சிலர்
தேனைக்
குடித்துத்
தேனடைகளைப்
பிழிந்து
விட்டெறிந்தார்கள்;
சிலர்
தேன்
மெழுகை
மற்றவர்மேல்
விட்டெறிந்தார்கள்;
சிலர்
தேனைக்
குடித்து
மயங்கி
மரங்களினடியில்
கிளைகளைப்
பிடித்துக்கொண்டு
தரையில்
இலைகளைப்
பரப்பிப்
படுத்துத்
தூங்கினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
சிலர்
மதுபானத்தால்
கொழுத்துப்
பைத்தியம்
பிடித்தவர்களைப்போல்
ஒருவர்க்கொருவர்
ஸந்தோஷத்தால்
இடித்துக்கொண்டார்கள்;
சிலர்
போட்டி
போட்டுக்கொண்டு
குதித்தார்கள்;
சிலர்
ஸிம்ஹநாதம்
செய்தார்கள்;
சிலர்
ஸந்தோஷம்
தாங்காதவர்கள்போல்
கூவினார்கள்;
சிலர்
ஒன்றும்
தோன்றாமல்
பூமியில்
படுத்துத்
தூங்கினார்கள்;
சிலர்
ஏதோ
ஒரு
காரியத்தைச்
செய்துவிட்டுச்
சிரித்தார்கள்;
அதைப்
பார்த்துச்
சிலர்
வேறு
காரியங்களைச்
செய்தார்கள்;
சிலர்
ஒரு
காரியத்தைச்
செய்துவிட்டு
இதை
நான்
செய்தேனென்று
சொல்லிக்
கொண்டார்கள்;
சிலர்
இதை
இப்படிச்
செய்யலாமென்று
நிச்சயித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
வனத்தில்
ததிமுகனால்
நியமிக்கப்பட்ட
காவற்காரர்கள்
வானரர்களால்
மிரட்டப்பட்டு,
மூலைக்குமூலை
ஓடித்
ததிமுகனிடத்திற்
சென்று,
“ஸ்வாமீ!
வானரர்கள்
நமது
மதுவனத்திற்
புகுந்து
அழிக்கிறார்கள்.
நாங்கள்
கூடியவரையில்
தடுத்தோம்.
எங்களை
அடித்துத்
துரத்திக்
கால்களைப்
பிடித்திழுத்து
ஆகாசத்தில்
விட்டெறிந்தார்கள்.
ஹநுமானுடைய
உத்தரவால்
இப்படிச்
செய்கிறார்கள்”
என்று
முறையிட்டார்கள்.
அதைக்
கேட்டுத்
ததிமுகன்
கடுங்கோபமடைந்து,
காவற்காரர்களை
ஸமாதானம்
செய்து,
“என்னுடன்
வாருங்கள்.
நமது
வனத்தை
அழிக்கும்
அந்தத்
துஷ்டர்களை
நமது
ஸைன்யத்தைக்கொண்டு
அடித்துத்
துரத்துவோம்”
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ததிமுகனும்
காவற்காரர்களும்
மதுவனத்தில்
பிரவேசித்து
மரங்களையும்
கற்களையும்
பாறைகளையும்
எடுத்துக்கொண்டு,
ததிமுகனுடைய
தைரியத்தால்
தேனைக்
குடித்துக்
கொண்டிருக்கும்
வானரர்கள்
இருக்குமிடத்திற்குச்
சென்றார்கள்.
ஹநுமானும்
மற்ற
வானரர்களும்,
ததிமுகன்
கோபத்துடன்
வருவதைக்
கண்டு
எதிர்
சென்றார்கள்.
மஹாபலவானான
ததிமுகன்
பெரிய
விருக்ஷத்தைப்
பிடுங்கிக்
கொண்டு
தங்களை
எதிர்ப்பதைக்
கண்டு,
அங்கதன்
குடிமயக்கத்தால்
ஒன்றும்
தெரியாமல்,
தனக்குப்
பூஜ்யனான
ததிமுகனைக்
கைகளால்
அறைந்து
கீழே
தள்ளி
தேய்த்துப்
பிண்டமாக்கினான்.
ததிமுகன்
கைகள்
முறிந்து,
கால்கள்
ஒடிந்து,
ரத்தத்தால்
நனைந்து,
கொஞ்ச
நேரம்
பிரக்ஞையற்றுக்
கிடந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
சீக்கிரமாய்
மூர்ச்சை
தெளிந்து,
கோபம்
கொண்டு,
தேனைக்
குடித்து
மயங்கியிருக்கும்
வானரர்களைத்
தடியால்
அடித்து
விலக்கினான்.
பிறகு
கஷ்டப்பட்டு
அவர்களிடத்திலிருந்து
தன்னை
விடுவித்துக்கொண்டு,
தனியாய்
ஓரிடத்திற்போய்த்
தன்
வேலைக்காரர்களைப்
பார்த்து,
இந்தத்
துஷ்டர்கள்
இங்கிருக்கட்டும்.
நமது
பிரபுவான
ஸுக்ரீவ
மஹாராஜாவும்
ராமனும்
இருக்குமிடத்திற்குப்
போவோம்.
அங்கதனிடத்தில்
ஸகல
தோஷத்தையும்
சுமத்துகிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
ஸுக்ரீவன்
கோபம்
கொண்டு
ஸகல
வானரர்களையும்
கொல்லும்படி
ஆக்ஞாபிப்பான்.
இந்த
மதுவனம்
தேவர்களும்
அண்டக்
கூடாதது;
ஸுக்ரீவனுக்கு
மிகவும்
பிரியமானது;
முன்னோர்களுக்குக்
கிடைத்தது;
மிகவும்
அழகானது.
தேனைக்
குடித்து
மதம்
கொண்ட
இந்த
வானர
வீரர்களையும்
அவர்களைச்
சேர்ந்தவர்களையும்
நிச்சயமாய்க்
கொல்வான்.
அரசனுடைய
ஆக்ஞையைக்
கடந்த
இவர்களைக்
கொல்லவேண்டியதே.
நம்மை
இப்படி
அவமானம்
செய்தது
வீண்போகுமா?”
என்று
அங்கிருந்து
அதிவேகமாய்க்
காவற்காரர்களுடன்
கிளம்பி
ஸூரியபுத்திரனான
ஸுக்ரீவன்
இருக்குமிடத்திற்கு
கண்
மூடித்
திறப்பதற்குள்
வந்து
சேர்ந்தான்.
அங்கே
ராமலக்ஷ்மணர்களையும்
ஸுக்ரீவனையும்
கண்டு
ஆகாசத்திலிருந்து
இரங்கித்
தன்
ஸேவகர்களுடன்
தலைமேல்
கைகூப்பி,
வெகு
தீனமாய்
ஸுக்ரீவனுடைய
பாதங்களில்
வணங்கினான்.
40
▾
Meaning
Keep
ஸ
தீ³நவத³நோ
பூ⁴த்வா
க்ருத்வா
ஶிரஸி
சாஞ்ஜலிம்
|
ஸுக்³ரீவஸ்ய
ஶுபௌ⁴
மூர்த்⁴நா
சரணௌ
ப்ரத்யபீட³யத்
||
Previous
←
வானரர்கள் மதுவனத்தில் பிரவேசித்தது
Next
ததிமுகன் முறையிட்டது
→