Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ததிமுகன் முறையிட்டது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ததிமுகன்
முறையிட்டது
1
▾
Meaning
Keep
ததோ
மூர்த்⁴நா
நிபதிதம்
வாநரம்
வாநரர்ஷப⁴:
|
த்³ருஷ்ட்வை
வோத்³விக்³நஹ்ருத³யோ
வாக்யமேத
து³வாச
ஹ
||
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கண்டு
ஸுக்ரீவன்
பயந்து,
என்ன
அனர்த்தம்
நேர்ந்ததோ
என்று
கவலை
கொண்டு,
“வானரவீரரே!
எழுந்திரும்,
எழுந்திரும்.
எதற்கும்
பயப்படாத
நீர்
என்
பாதங்களில்
விழுந்தது
ஆச்சரியமாக
இருக்கிறது;
நடந்ததைச்
சொல்லும்.
உமது
பயத்தை
நீக்குகிறேன்”
என்றான்.
மஹாபுத்திமானான
ததிமுகன்
இப்படி
ஸமாதானம்
செய்யப்பட்டு
எழுந்து,
“தங்களுடைய
பிதாவான
ரிக்ஷரஜஸும்
தமையனான
வாலியும்
தாங்களும்
மதுவனத்தைப்
பிறர்
அனுபவிக்கும்படி
விட்டதில்லையல்லவா?
அங்கே
தங்களைச்
சேர்ந்த
வானரர்கள்
பிரவேசித்து,
என்
காவற்காரர்கள்
தடுத்தபொழுதும்
அதனைக்
கொஞ்சம்கூட
லக்ஷ்யம்
செய்யாமல்,
பழங்களைப்
பறித்து
தேனைக்
குடிக்கிறார்கள்;
மிருதியை
விட்டெறிகிறார்கள்;
தடுத்தால்
வெறித்துப்
பார்க்கிறார்கள்;
கோபத்தால்
கண்கள்
சிவந்து
இவர்களை
வனத்திலிருந்து
அடித்துத்
துரத்திவிட்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
சிலரைக்
கைகளால்
அறைந்து,
சிலரை
முழங்கால்களால்
இடித்து,
சிலரைப்
பூமியில்
தள்ளி
இழுத்து,
சிலரைக்
காலைப்
பிடித்து
ஆகாசத்தில்
எறிந்து,
இப்படிப்
பிரபுவான
தாங்கள்
இருக்கும்பொழுது
எங்களை
உபத்திரவித்து
தங்களையும்
அலக்ஷ்யம்
செய்து,
மதுவனம்
முழுவதையும்
தாம்
நினைத்தபடியெல்லாம்
அனுபவித்து
அழிக்கின்றார்கள்”
என்று
தெரிவித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
லக்ஷ்மணன்
ஸுக்ரீவனைப்
பார்த்து,
“இந்த
வானரன்
யார்?
வனங்களுக்குக்
காவற்காரனைப்போல்
தோன்றுகிறது.
என்ன
காரியமாய்
இங்கு
வந்தான்?
வாடின
முகத்துடன்
என்ன
சொல்லுகிறான்?”
என்று
கேட்டார்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
ஸுக்ரீவன்,
“லக்ஷ்மண!
தெற்கே
அனுப்பப்பட்ட
அங்கதன்
முதலிய
வானரர்கள்
என்
மதுவனத்தில்
புகுந்து
தம்
விருப்பப்படி
தேனைக்
குடிக்கிறார்களென்று
ததிமுகனென்ற
இந்த
வானரவீரன்
சொல்கிறான்.
உத்தேசித்த
காரியத்தை
முடிக்காமல்
வானரவீரர்கள்
மதுவனத்தில்
பிரவேசிக்க
மாட்டார்கள்;
தேனைக்
குடிக்கமாட்டார்கள்;
வனத்தை
அழிக்க
மாட்டார்கள்.
ஆகையால்
போன
காரியத்தை
முடித்துக்கொண்டு
வந்திருக்கிறார்கள்.
ஸீதையைக்
கண்டுபிடித்தார்கள்
என்பதில்
ஸந்தேகமில்லை.
மேலும்
ஹநுமானே
அந்தக்
காரியத்தைச்
செய்திருக்கிறான்.
அவனைத்
தவிர
வேறொருவரும்
அதைச்
செய்யக்கூடுமென்று
நான்
எண்ணவில்லை.
காரியஸித்தியும்
புத்தியும்
பிரயத்னமும்
பராக்கிரமமும்
சாஸ்திரஞானமும்
அவனிடத்தில்
குடிகொண்டிருக்கின்றன.
ஜாம்பவான்
மந்திரியாயும்
அங்கதன்
சேனாநாயகனாகவும்
ஹநுமான்
ரக்ஷகனாயும்
இருக்கையில்
காரியம்
முடியாமல்
வேறுவிதமாகுமோ?
Prose passage
▾
Meaning
Keep
அவர்கள்
அடங்காத
ஸந்தோஷத்தால்
மதுவனத்தில்
பிரவேசித்துத்
தேனைக்
குடிக்கிறார்கள்.
ததிமுகனும்
காவற்காரர்களும்
அவர்களைத்
தடுத்தபொழுது
முழங்கால்களால்
இடித்துத்
துரத்தி
விட்டார்கள்.
இந்த
ஸந்தோஷ
ஸமாசாரத்தை
நமக்குச்
சொல்ல
வானரவீரனான
ததிமுகன்
இங்கே
வந்திருக்கிறான்.
லக்ஷ்மண!
வீரசிரேஷ்ட!
ஸீதையைக்
கண்டுபிடித்தோம்.
நிச்சயமாய்
நம்பும்.
ஆகையாலேயே
நமது
வீரர்கள்
மதுவனத்தில்
புகுந்து
தேனைக்
குடித்து
உத்ஸவம்
கொண்டாடுகிறார்கள்.
அவ்வாறு
இல்லாவிடில்
நான்
வைத்த
கெடுவையும்
கடந்து,
ஸீதையையும்
பார்க்காமல்,
நான்
கண்ணுக்குக்
கண்ணாய்
வைத்திருக்கும்
சிரேஷ்டமான
மதுவனத்தை,
பிரஹ்மாவால்
என்
பிதாவான
ரிக்ஷரஜஸுக்குக்
கொடுக்கப்பட்டதை
அழிக்க
முற்படுவார்களா?”
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
ஸுக்ரீவனுடைய
வார்த்தைகள்
அமிருத
தாரையைப்போல்
ராமலக்ஷ்மணர்களுடைய
செவிகளில்
விழுந்து
ஹிருதயத்திலுள்ள
தாபங்களைப்
போக்கி
அளவற்ற
ஆனந்தத்தை
உண்டுபண்ணின.
பிறகு
ஸுக்ரீவன்
ததிமுகனை
நோக்கி
ஸந்தோஷத்துடன்,
“மாமா!
அங்கதனும்
மற்ற
வானரர்களும்
நமது
காரியத்தை
முடித்து
வந்த
ஸந்தோஷத்தால்
மதுவனத்தில்
புகுந்து
விளையாடுகிறார்கள்.
அது
எனக்குத்
திருப்தியே.
ஜயத்துடன்
வந்தவர்களால்
செய்யப்பட்ட
இந்த
அபராதத்தை
மன்னிக்கவேண்டியது
அவசியம்.
அப்படியே
மன்னித்தேன்.
அனுப்பின
காரியத்தை
முடித்துக்கொண்டு
வந்த
ஸிம்ஹம்போல்
பராக்கிரமசாலிகளான
அந்த
வானரவீரர்களையும்
அவர்களுக்குப்
பூஷணமான
ஹநுமானையும்
பார்த்து
ஸீதையைக்
கண்ட
விருத்தாந்தத்தைக்
கேட்க
ராமலக்ஷ்மணர்களும்
நானும்
ஆவல்
கொண்டிருக்கிறோம்”
என்றான்.
பிறகு
ஸந்தோஷத்தால்
கண்கள்
மலர்ந்து
தேகமெங்கும்
மயிர்க்
கூச்சமிட்டுப்
பேரானந்தத்தால்
பூரித்த
ராமலக்ஷ்மணர்களைப்
பார்த்துத்
தானும்
மயிர்க்கூச்சமடைந்து,
தங்களுடைய
உத்தேசங்களெல்லாம்
கைகூடியதாகக்
கருதி
எல்லையற்ற
ஆனந்தத்தை
அடைந்தான்.
Śloka
▾
Meaning
Keep
ப்ரீதிஸ்பீ²தாக்ஷௌ
ஸம்ப்ரஹ்ருஷ்டௌ
குமாரௌ
த்³ருஷ்ட்வா
ஸித்³தா⁴ர்தௌ²
வாநராணாம்
ச
ராஜா
|
அங்கை³:
ஸம்ஹ்ருஷ்டை:
கர்மஸித்³தி⁴ம்
விதி³த்வா
பா³ஹ்வோ
ராஸந்நாம்
ஸோதிமாத்ரம்
நநந்த³
||
Previous
←
வானரர்கள் மதுவனத்தை அழித்தது
Next
வானரர்கள் ஸுக்ரீவனிடத்திற்கு வந்தது
→