Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · வானரர்கள் ஸுக்ரீவனிடத்திற்கு வந்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
வானரர்கள்
ஸுக்ரீவனிடத்திற்கு
வந்தது
1
▾
Meaning
Keep
ஸுக்ரீ³வேணைவமுக்தஸ்து
ஹ்ருஷ்டோ
த³தி⁴முக²:
கபி:
|
ராக⁴வம்
லக்ஷ்மணம்
சைவ
ஸுக்³ரீவம்
சாப்⁴யவாத³யத்
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ஸுக்ரீவனால்
கட்டளையிடப்பட்ட
ததிமுகன்
ஸந்தோஷமாய்
ராமலக்ஷ்மணர்களையும்
மஹாராஜாவையும்
நமஸ்கரித்துத்
தன்
ஸேவகர்களுடன்
ஆகாசத்தில்
கிளம்பி
வெகு
சீக்கிரமாய்
மதுவனத்திற்கு
வந்து
குதித்தான்.
அங்கே
வானரர்கள்
மயக்கம்
தெளிந்து,
குடித்த
தேன்
ஜீர்ணமாகி,
தம்
நினைவுடன்
சிறுநீர்
கழித்துக்
கொண்டிருந்தனர்.
ததிமுகன்
கைகூப்பி
வணக்கமாய்
அவர்களிடத்தில்
சென்று,
ஸந்தோஷத்துடன்
அங்கதனைப்
பார்த்து,
“குழந்தாய்!
என்
ஸேவகர்கள்
கோபத்தாலும்
அறியாமையாலும்
உங்களைத்
தடுத்தார்கள்.
அதைப்
பற்றிக்
கோபிக்கக்கூடாது.
நீ
மஹாபலவான்;
யுவராஜா;
எங்களுக்குப்
பிரபு;
முதலில்
அறிவின்மையால்
செய்யப்பட்ட
அபராதத்தைப்
பொறுக்கவேண்டியது.
Prose passage
▾
Meaning
Keep
உன்னிடத்தில்
யாதொரு
குற்றமும்
இல்லை.
நீங்களெல்லோரும்
இங்கே
வந்திருக்கிறீர்களென்று
உன்
சிற்றப்பனிடத்தில்
தெரிவித்தேன்.
நீயும்
மற்ற
வானர
வீரர்களும்
இங்கே
வந்திருப்பதையும்
இந்த
மதுவனத்தில்
பிரவேசித்து
இஷ்டப்படி
ஸஞ்சரித்ததையும்
கேள்விப்பட்டுக்
கோபித்துக்கொள்ளவில்லை;
மிகவும்
ஸந்தோஷப்பட்டான்.
‘ஸகல
வானரர்களையும்
அதிசீக்கிரமாய்
என்னிடத்தில்
அனுப்பவேண்டியது’
என்று
எனக்கு
உத்தரவு
செய்தான்”
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
ததிமுகனுடைய
மதுரமான
வார்த்தைகளைக்
கேட்டுப்
புத்திமானான
அங்கதன்,
“வானர
சிரேஷ்டர்களே!
இந்த
விருத்தாந்தம்
ராமனுக்குத்
தெரிந்ததென்று
எண்ணுகிறேன்.
ஆகையால்
கட்டளையிட்ட
காரியத்தை
முடித்துவிட்டு
நாம்
இங்கே
தங்குவது
யுக்தமல்ல.
நமது
ஸைன்யங்கள்
விரும்பியபடி
தேனைக்
குடித்து
களைப்பாற்றிக்
கொண்டார்கள்.
ஆகையால்
நமது
பிரபு
இருக்குமிடத்திற்குப்
போவதைத்
தவிர
வேறென்ன
செய்யவேண்டியது?
நீங்களெல்லோரும்
எப்படிச்
சொல்லுகிறீர்களோ
அப்படிச்
செய்கிறேன்.
உங்களுடைய
யோசனையின்படி
நடக்கவேண்டியதென்று
என்
கருத்து.
நான்
உங்களுக்கு
யுவராஜாவாக
இருந்தாலும்
உங்களைக்
கட்டளையிட
எனக்கிஷ்டமில்லை.
நம்மை
அனுப்பின
காரியத்தை
முடித்து
வந்த
உங்களை
அலக்ஷ்யம்
செய்யத்
தகுமா?
ஆகையால்
இருக்க
வேண்டுமென்றால்
இருப்போம்.
போவோமென்றால்
போவோம்”
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
ஸகல
வானரர்களும்
மிகுந்த
ஸந்தோஷத்தை
அடைந்து,
“பிரபோ!
தங்களைப்போல்
யுவராஜாவாயும்
கணக்கில்லாத
வானர
ஸைன்யங்களுக்கு
அதிபதியாயும்
இருந்து,
இப்படிப்பட்ட
விநயமான
வார்த்தையைச்
சொல்லுகிறவன்
தங்களைத்
தவிர
வேறுண்டோ?
இந்த
வார்த்தைகள்
தங்களுக்கே
தகும்.
மற்ற
எவனுக்கும்
தகாது.
லோகத்தில்
பெரும்பாலும்
ஜனங்கள்
ஐசுவரியத்தால்
கொழுப்படைந்து,
எல்லாம்
நானே
என்று
எண்ணுகிறார்கள்.
தங்களிடத்தில்
விளங்கும்
இந்த
விநயம்
இனி
தங்களுக்குக்
கிடைக்கப்போகின்ற
மங்களத்தைக்
காட்டுகிறது.
நாங்களெல்லோரும்
ஸுக்ரீவ
மஹாராஜாவிடத்திற்குப்
போகத்
தயாராக
இருக்கிறோம்.
தங்களுடைய
ஆக்ஞையில்லாமல்
அடியெடுத்து
வைக்க
எங்களால்
முடியுமா?
இது
உபசார
வார்த்தை
அல்ல.
ஸத்தியமே”
என்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
அங்கதன்,
‘ஸரி’
என்றான்.
உடனே
வானரர்கள்,
‘புறப்படுவோம்’
என்று
சொல்லி
ஆகாசத்தில்
கிளம்பி,
அதை
மறைத்துக்
கொண்டு
யந்திரத்திலிருந்து
எறியப்பட்ட
கற்பாறைகளைப்போல்
அங்கதனைப்
பின்தொடர்ந்து,
பெருங்காற்றால்
அடிக்கப்பட்ட
மஹா
மேகங்களைப்போல்
கர்ஜித்துக்கொண்டு
அதிவேகமாகச்
சென்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்குள்
அங்கதன்
முதலிய
வானரர்கள்
வருவதற்குத்
தாமதப்பட்டதால்
ராமனுடைய
செந்தாமரைக்
கண்கள்
துக்கத்தால்
கலங்க,
அதைக்
கண்டு
ஸுக்ரீவன்,
“ரகுவீர!
தங்களுக்கு
ஸகல
மங்களங்களும்
உண்டாகட்டும்.
மனத்தை
ஸமாதானம்
செய்துகொள்ளுங்கள்.
ஸீதை
கண்டுபிடிக்கப்பட்டாள்
என்பதில்
ஸந்தேகமே
இல்லை.
நான்
வைத்த
கெடுவைத்
தாண்டி
வானரர்கள்
இங்கே
வரத்
துணிவார்களா?
யுவராஜாவும்
மஹாபராக்கிரமசாலியுமான
அங்கதன்
காரிய
ஸித்தியில்லாமல்
இங்கே
வரமாட்டான்
என்பது
தங்களுக்குத்
தெரியாதா?
காரியத்தை
முடிக்காமல்
மதுவனத்தை
அழித்திருந்தால்
அங்கதன்
தீனமான
முகத்துடன்
மனம்
கலங்கி
நடுங்கமாட்டானா?
பிரஹ்மாவால்
என்
பிதாவிற்குக்
கொடுக்கப்பட்டு
அவராலும்
வாலியாலும்
வெகு
ஜாக்கிரதையாய்
ரக்ஷிக்கப்பட்ட
மதுவனத்தை
துக்கப்பட்டுக்
கொண்டிருப்பவன்
அழிக்கத்
துணிவானா?
Prose passage
▾
Meaning
Keep
ராம!
ஸீதையைக்
கண்டுபிடித்தோம்.
ஸகலப்
பிராணிகளுக்கும்
ஸந்தோஷத்தைக்
கொடுப்பவர்
என்ற
(ராமன்)
பெயர்
இப்பொழுதுதான்
தங்களுக்குத்
தகும்.
இப்பொழுது
ஸகல
துக்கமும்
தீர்ந்து
அளவற்ற
ஆனந்தத்தை
அடைந்தீர்களல்லவா?
ஸீதையைக்
கண்டதால்
தங்களுடைய
பிராணன்
நிலைபெற்றது.
இன்றுதான்
கௌஸல்யாதேவி
சிரேஷ்டமான
புத்திரனைப்
பெற்றாள்
என்று
சொல்லலாம்.
தாங்கள்
இதுவரையில்
அனுஷ்டித்த
மஹா
விரதங்கள்
இப்பொழுதுதான்
பயன்
பெற்றன.
துக்கப்படவேண்டாம்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதையைக்
கண்டுபிடித்து
விட்டார்கள்.
அதையும்
ஹநுமானே
செய்திருக்கவேண்டும்.
அவனைத்
தவிர
இந்தக்
காரியத்தைச்
செய்யக்கூடியவர்கள்
வேறொருவரும்
இல்லை.
ஸூரியனிடத்தில்
தேஜஸ்
ஸ்வபாவமாயும்
அளவற்றதாயும்
இருப்பதுபோல்,
ஹநுமானிடத்தில்
காரியஸித்தியும்
புத்தியும்
முயற்சியும்
பராக்கிரமமும்
குடிகொண்டிருக்கின்றன.
யோசனை
சொல்லுகிறவன்
ஜாம்பவானும்
ஸேனாநாயகன்
அங்கதனும்
ரக்ஷகன்
ஹநுமானும்
இருக்கையில்
காரியம்
வேறு
விதமாய்
முடியுமா?
ஆகையால்
அளவற்ற
பராக்கிரமமுள்ள
தங்கள்
எண்ணங்களெல்லாம்
கைகூடிவரும்
இந்த
ஸமயத்திலா
துக்கப்படுகிறது?”
என்று
ஸமாதானம்
செய்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்குள்
தெற்கே
தேடப்போன
வானரர்கள்,
ஹநுமான்
ஸீதையைக்
கண்டுபிடித்ததால்
கர்வமடைந்து,
காரியத்தை
முடித்தோம்
என்றதைத்
தெரிவிப்பவர்கள்போல்
கர்ஜித்துக்கொண்டு,
கில
கில
சப்தத்துடன்
ஆகாச
மார்க்கமாய்
வருவது
ஸமீபத்தில்
கேட்கப்பட்டது.
உடனே
ஸுக்ரீவன்
ஸந்தோஷத்தால்
மயிர்க்கூச்சமடைந்து
தன்
நீண்ட
வாலைச்
சுழற்றினான்.
அப்பொழுது
வானர
சிரேஷ்டர்கள்
அங்கதனையும்
ஹநுமானையும்
முன்னிட்டுக்
கொண்டு
ராமனைத்
தரிசிக்க
விரும்பி,
அங்கே
வந்துசேர்ந்து,
ஆனந்தத்தால்
தேகத்தை
மறந்து
ஸுக்ரீவனும்
ராமலக்ஷ்மணர்களும்
இருக்குமிடத்திற்கு
அருகில்
ஆகாசத்திலிருந்து
பூமியில்
குதித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஹநுமான்
மஹாராஜாவையும்
ராமலக்ஷ்மணர்களையும்
ஸாஷ்டாங்கமாய்
நமஸ்கரித்து,
ராகவனை
நோக்கி,
“ஸ்வாமி!
கண்டேன்
ஸீதையை.
யாதொரு
அபாயமும்
இல்லாமல்
பதிவிரதா
தர்மத்தைப்
பூர்ணமாக
அனுஷ்டித்துக்கொண்டிருக்கிறாள்”
என்று
விக்ஞாபனம்
செய்தார்.
தங்களுடைய
காரியம்
நிறைவேறிற்றென்று
நிச்சயமடைந்து,
ஸுக்ரீவனும்
லக்ஷ்மணனும்
ஹநுமானை
வெகு
கௌரவத்துடனும்
பிரீதியுடனும்
கண்கொட்டாமல்
பார்த்தார்கள்.
ரகுவீரன்
அடைந்த
ஆனந்தத்திற்கு
எல்லையுமுண்டோ?
42
▾
Meaning
Keep
ப்ரீத்யா
ச
ரமமாணோத²
ராக⁴வ:
பரவீரஹா
|
ப³ஹுமாநேந
மஹதா
ஹநுமந்த
மவைக்ஷத
||
Previous
←
ததிமுகன் முறையிட்டது
Next
ஸீதா விருத்தாந்தம்
→