Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதா விருத்தாந்தம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதா
விருத்தாந்தம்
1
▾
Meaning
Keep
தத:
ப்ரஸ்ரவணம்
ஶைலம்
தே
க³த்வா
சித்ர
காநநம்
|
ப்ரணம்ய
ஶிரஸா
ராமம்
லக்ஷ்மணம்
ச
மஹாப³லம்
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அந்த
வானரர்கள்
பிரஸ்ரவணகிரிக்கு
வந்து,
அங்கதனை
முன்னிட்டுக்கொண்டு,
ராமலக்ஷ்மணர்களையும்
ஸுக்ரீவனையும்
நமஸ்கரித்து,
ஸீதையின்
விருத்தாந்தத்தைச்
சொல்ல
ஆரம்பித்தார்கள்.
ஜானகி
ராவணனுடைய
அந்தப்புரத்தில்
சிறைபட்டிருப்பதையும்,
ராக்ஷஸர்களால்
மிரட்டப்படுவதையும்,
ராமனிடத்தில்
மாறாத
விசுவாஸத்தை
வைத்திருப்பதையும்,
ராவணன்
கெடு
இட்டிருப்பதையும்
ஸகல
வானரர்களும்
ராமனிடத்தில்
சொல்ல
ஆரம்பித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
க்ஷேமமாக
இருக்கிறாள்
என்பதைக்
கேட்டு
ராமன்,
“வானரர்களே!
ஸீதை
எங்கிருக்கிறாள்?
என்னிடத்தில்
எப்படி
அபிப்பிராயப்படுகிறாள்?
இதை
விஸ்தாரமாகச்
சொல்லுங்கள்”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஸகல
வானரர்களும்
ஸீதையின்
விருத்தாந்தத்தை
பிரத்யக்ஷமாய்ப்
பார்த்தறிந்த
ஆஞ்ஜநேயரை
ராமனிடத்தில்
விண்ணப்பம்
செய்யும்படி
தூண்டிவிட்டார்கள்.
அவர்கள்
சொல்வதைக்
கேட்டு
ஹநுமான்
ஸீதை
இருக்கும்
திசையைப்
பார்த்து
வெகு
பக்தியுடன்
நமஸ்கரித்து,
ஸீதையின்
விருத்தாந்தத்தை
வெகு
சாதுரியமாய்ச்
சொல்ல
ஆரம்பித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“நான்
இங்கிருந்து
புறப்பட்டு
நூறுயோஜனை
விஸ்தீர்ணமுள்ள
ஸமுத்திரத்தைத்
தாண்டி,
ஸீதையைத்
தேடிக்கொண்டு,
எப்படியாவது
அவளைக்
கண்டுபிடிக்கிறதென்ற
நிச்சயத்துடன்
செல்லுகையில்,
ஸமுத்திரத்திற்கு
அக்கரையில்
ராவணனென்ற
துஷ்ட
ராக்ஷஸனுடைய
ராஜதானியான
லங்கையில்
பிரவேசித்து
ஓரிடம்
பாக்கியில்லாமல்
தேடினேன்.
முடிவில்
அவனுடைய
அந்தப்புரத்தில்
ஸீதை
காவலில்
வைக்கப்பட்டிருப்பதைக்
கண்டேன்.
அங்கே
அசோகவனத்தில்
ராக்ஷஸிகளால்
சூழப்பட்டு,
அவர்களுடைய
குரூரவார்த்தைகளையும்
ஹிம்ஸையையும்
பொறுத்துக்கொண்டு,
தங்களிடத்தில்
மாறாத
பிரீதி
வைத்திருப்பதைக்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
பரமபதிவிரதையாயும்
துக்கத்தை
அனுபவிக்கத்
தகாதவளாயும்
இருக்கும்
தங்களுடைய
பாரியை,
ஒரே
பின்னலுடன்
துக்க
ஸமுத்திரத்தில்
முழுகிக்
கரைகாணாமல்
வெறும்
தரையில்
படுத்திருக்கிறாள்.
ஹேமந்தருதுவில்
வாடியிருக்கும்
தாமரையோடையைப்போல்
நிறம்
மாறி,
ராவணன்
எவ்வளவு
பிரார்த்தித்தும்
அவனிடத்தில்
சிறிதும்
மனத்தைச்
செலுத்தாமல்,
தங்களிடத்திலேயே
நாடின
சித்தத்தையுடையவளாய்
இனி
உயிரை
வைத்துக்கொள்ளுகிறதில்லை
என்று
நிச்சயம்
செய்துகொண்டிருக்கையில்,
நான்
அவளைக்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
இக்ஷ்வாகுவம்சத்தின்
மஹிமையை
நான்
வர்ணிப்பதைக்
கேட்டு
அவளுக்கு
என்னிடத்தில்
மெள்ள
மெள்ள
நம்பிக்கையுண்டாயிற்று.
பிறகு
அவளுடன்
ஸம்பாஷித்து
நடந்த
விருத்தாந்தம்
யாவற்றையும்
தெரிவித்தேன்.
தங்களுக்கும்
மஹாராஜாவிற்கும்
ஸ்நேகமேற்பட்டதைக்
கேட்டு
மிகவும்
ஸந்தோஷித்தாள்.
அவளுடைய
ஆசாரம்
சிரேஷ்டமாக
இருக்கிறது.
தங்களிடத்தில்
பக்தியும்
எல்லையற்றதாக
இருக்கிறது.
மஹாப்பிரபாவமுள்ளவள்.
உக்ரமான
தபஸையுடையவள்.
தங்களிடத்தில்
வைத்த
பக்தியை
எப்படி
வர்ணிப்பேன்!
Prose passage
▾
Meaning
Keep
நிகரில்லாத
புத்தியையுடைய
மஹானுபாவ!
தாங்கள்
சித்திரகூடத்தில்
வஸிக்கையில்
ஒரு
காக்கையின்
விஷயமாய்
நடந்த
விருத்தாந்தத்தைத்
தங்களுக்கு
அடையாளமாகச்
சொல்லச்
சொன்னாள்.
‘வாயுபுத்திர!
இங்கே
பார்த்த
விஷயங்கள்
எல்லாவற்றையும்
விஸ்தாரமாய்ச்
சொல்லவேண்டியது.
ராம,
மேலும்
நாம்
தண்டகாரண்யத்தில்
வஸிக்கையில்
ஒருநாள்
என்
திலகம்
அழிந்துபோகத்
தாங்கள்
மனச்சிலையால்
என்
நெற்றியில்
வேறு
திலகம்
வைக்கவில்லையா?
இந்த
விஷயத்தை
நன்றாய்
ஞாபகப்படுத்திக்
கொள்ளவேண்டியது.
Prose passage
▾
Meaning
Keep
நான்
இப்பொழுது
அனுப்பும்
சூடாமணியை
இதுவரையில்
வெகு
ஜாக்கிரதையாய்
ரக்ஷித்து
வந்தேன்.
நான்
தங்களைப்
பிரிந்து
துக்கப்படும்போதெல்லாம்
தங்களைப்
பார்ப்பதுபோல்
இதைப்
பார்த்து
ஆறுதலடைந்தேன்.
இப்பொழுது
அதையும்
அனுப்பி
விட்டேன்.
நான்
இன்னும்
ஒரு
மாதம்
மாத்திரம்
பிழைத்திருப்பேன்.
ராக்ஷஸிகளால்
ஒவ்வொரு
நிமிஷமும்
உபத்திரவிக்கப்பட்டு
ஒரு
மாதத்திற்குமேல்
பிழைத்திருக்கமாட்டேன்
என்று
இந்த
வார்த்தைகளை
ஸுக்ரீவன்
கேட்டுக்கொண்டிருக்கையில்
ராமனிடத்தில்
சொல்லிப்
பிறகு
சூடாமணியைக்
கொடு’
என்று
என்னை
ஆக்ஞாபித்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனுடைய
அந்தப்புரத்தில்
ராக்ஷஸிகளுக்கு
நடுவில்
அகப்பட்டு,
காட்டில்
புலிகளுக்கு
நடுவில்
அகப்பட்ட
மானைப்போல்
பயத்தால்
மிரண்டு,
தங்களைப்
பிரிந்த
துக்கத்தால்
தேகம்
இளைத்து,
இவ்வளவு
கஷ்டத்திலும்
பதிவிரதா
தர்மத்தைக்
கொஞ்சம்கூடக்
கைவிடாமல்
பூர்ணமாக
அனுஷ்டிக்கும்
தங்களுடைய
பாரியை
சொல்லியனுப்பின
ஸமாசாரம்
இதுதான்.
நடந்தபிரகாரம்
ஸகல
விருத்தாந்தங்களையும்
தெரிவித்தேன்.
Prose passage
▾
Meaning
Keep
எது
எப்படியிருந்தாலும்
ஸமுத்திரத்தைக்
கடந்து
லங்கைக்குப்
போவதற்கு
வேண்டிய
ஸகல
பிரயத்தனங்களையும்
இப்பொழுதே
செய்யவேண்டியது”
என்று
ஆரம்பம்
முதல்
முடிவு
வரையில்
ஸகல
விஷயங்களையும்
சாதுரியமாயும்
உருக்கமாயும்
வர்ணித்து,
ராமலக்ஷ்மணர்கள்
துக்கத்தைவிட்டு
ஆறுதலடைந்தார்களென்று
அறிந்து,
ஸீதை
அடையாளமாய்க்
கொடுத்த
சூடாமணியை
ஹநுமார்
ரகுநாதனிடத்தில்
வணக்கமாய்
ஸமர்ப்பித்தார்.
26
▾
Meaning
Keep
தௌ
ஜாதாஶ்வாஸௌ
ராஜபுத்ரௌ
விதி³த்வா
தச்சாபி⁴ஜ்ஞாநம்
ராக⁴வாய
ப்ரதா³ய
|
தே³வ்யா
சாக்²யாதம்
ஸர்வமேவாநு
பூர்வ்யாத்
வாசா
ஸம்பூர்ணம்
வாயுபுத்ர:
ஶஶம்ஸ
||
Previous
←
வானரர்கள் ஸுக்ரீவனிடத்திற்கு வந்தது
Next
சூடாமணியைக் கண்டு ராமன் துக்கித்தது
→