Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · சூடாமணியைக் கண்டு ராமன் துக்கித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
சூடாமணியைக்
கண்டு
ராமன்
துக்கித்தது
1
▾
Meaning
Keep
ஏவமுக்தே
ஹநுமதா
ராமோ
த³ஶரதா²த்மஜ:
|
தம்
மணிம்
ஹ்ருத³யே
க்ருத்வா
ப்ரருரோத³
ஸலக்ஷ்மண:
||
Prose passage
▾
Meaning
Keep
ஹநுமான்
இப்படிச்
சொல்லிச்
சூடாமணியைக்
கொடுத்தவுடன்,
ரகுவீரன்
அதை
மார்போடணைத்து,
அடங்காத
பிரீதியுடன்
பார்த்துப்
பூர்வ
ஞாபகத்தால்
துக்கம்
மேலிட்டுக்
கண்ணீர்
கண்களை
மறைக்க,
சூடாமணியைப்
பார்க்கமுடியாமல்
ஸுக்ரீவனை
நோக்கி,
“நண்பனே!
கன்றிடத்தில்
வைத்த
பிரியத்தால்
பசு
எப்படிப்
பாலைப்
பெருக்குமோ
அப்படி
இந்தச்
சூடாமணியைப்
பார்த்தவுடன்
என்
ஹிருதயம்
உருகுகிறது.
Prose passage
▾
Meaning
Keep
என்
விவாஹ
காலத்தில்
தசரத
சக்கரவர்த்தி
இதை
ஜனகமஹாராஜனிடத்திலிருந்து
வாங்கி
ஸீதையின்
தலையில்
வைத்து
அலங்கரிக்கும்படி
கொடுத்தார்.
அப்படியே
ஸீதையின்
மாதா
அதைச்
சூட்டினாள்.
உடனே
இந்த
ஆபரணம்
முன்னைவிட
அதிகமாய்
பிரகாசித்தது.
இந்த
உத்தம
ரத்தினம்
ஸமுத்திரத்திலிருந்து
உண்டானது;
ஸாதுக்களால்
பூஜிக்கப்பட்டது.
இதை
தேவேந்திரன்
முன்னொருகாலத்தில்
ஜனகர்
செய்த
யக்ஞத்தால்
ஸந்தோஷித்து
அவருக்கு
வெகுமதியாகக்
கொடுத்தான்.
இதைக்
கண்டவுடன்
என்
பிதாவையும்
மஹாத்மாவான
ஜனகரையும்
பார்த்தது
போலாயிற்று.
Prose passage
▾
Meaning
Keep
இது
என்
ஸீதையின்
சிரஸில்
அழகாய்
விளங்கும்
ஆபரணமல்லவா?
இதைப்
பார்த்தவுடன்
அவளையே
அடைந்ததுபோல்
எண்ணுகிறேன்.
ஹநுமானே,
ஸீதை
என்ன
சொன்னாள்?
அதையே
அடிக்கடி
சொல்.
தாகத்தால்
தவிப்பவனுக்குக்
குளிர்ந்த
ஜலம்
கிடைத்தால்
எப்படியோ
அப்படி
அவளுடைய
வார்த்தைகள்
என்
தாபத்தைத்
தணிக்கின்றன.
லக்ஷ்மணா,
இந்த
ஆபரணத்தை
ஸீதையின்
சிரஸில்
பார்த்துவிட்டு
இப்பொழுது
ஸீதையில்லாமல்
இதை
மாத்திரம்
பார்க்கும்படி
நேர்ந்ததே!
இதைவிட
கஷ்டமுண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
ஒரு
மாதம்
வரையில்
பிழைத்திருப்பாளென்றால்
அவள்
தீர்க்காயுளுள்ளவள்
என்றே
சொல்லவேண்டும்.
ஏனென்றால்
அழகான
கண்களையுடைய
ஜானகியைப்
பாராமல்
ஒரு
நிமிஷம்கூடப்
பிழைத்திருக்கமாட்டேன்.
ஹநுமானே,
ஸீதையை
எவ்விடத்தில்
கண்டாயோ
அவ்விடத்திற்கு
என்னையும்
அழைத்துச்
செல்.
ஸீதையின்
விருத்தாந்தம்
தெரிந்தபிறகு
ஒரு
க்ஷணம்கூட
இங்கு
இருக்கமாட்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
அழகில்
நிகரற்றவள்;
ஸ்வபாவமாய்
மிகவும்
பயந்தவள்;
சிரேஷ்டமான
பதிவிரதை;
இப்படிப்பட்டவள்
பயங்கரமான
குரூர
ராக்ஷஸிகளுக்கு
நடுவில்
பிழைத்திருப்பதெப்படி?
சரத்
காலத்தில்
இருள்
நீங்கி
மேகங்களால்
சூழப்பட்ட
சந்திரனைப்போல்
விகாரரூபமுள்ள
ராக்ஷஸர்களுக்கு
நடுவில்
அவளுடைய
முகம்
பிரகாசிக்காதல்லவா?
ஸீதை
என்ன
சொன்னாள்?
அதை
நிஜமாகச்
சொல்லும்.
Prose passage
▾
Meaning
Keep
ரோகத்தால்
பீடிக்கப்படுகிறவன்
சிரேஷ்டமான
ஔஷதங்களால்
எப்படிப்
பிழைப்பானோ
அப்படி
நீர்
சொல்லும்
வார்த்தைகளால்
நான்
உயிரை
வைத்துக்கொண்டிருப்பேன்.
அவளுடைய
ரூபம்
பார்க்கப்
பார்க்க
இன்பத்தைக்
கொடுக்கும்;
அவளுடைய
வார்த்தைகள்
கேட்கக்
கேட்க
அமிருததாரையைப்போல்
இருக்கும்;
என்னைவிட்டுப்
பிரிந்து
தவிக்கும்
ஸீதை
என்ன
சொன்னாள்?”
என்று
மிகவும்
தீனமாய்க்
கேட்டார்.
15
▾
Meaning
Keep
மது⁴ரா
மது⁴ராலாபா
கிமாஹ
மம
பா⁴மீநீ
|
மத்³விஹீநா
வராரோஹா
ஹநுமந்
கத²யஸ்வ
மே
||
Previous
←
ஸீதா விருத்தாந்தம்
Next
ஸீதையின் விருத்தாந்தம்
→