Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதையின் விருத்தாந்தம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதையின்
விருத்தாந்தம்
1
▾
Meaning
Keep
ஏவமுக்தஸ்து
ஹநுமாந்
ராக⁴வேண
மஹாத்மநா
|
ஸீதாயா
பா⁴ஷிதம்
ஸர்வம்
ந்யவேத³யத
ராக⁴வே
||
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
ஆஞ்ஜநேயர்
ஸீதையின்
ஸகல
விருத்தாந்தங்களையும்
சொல்ல
ஆரம்பித்தார்.
“ரகுவீர!
தங்களுடைய
பாரியை
தாங்கள்
சித்திரகூடத்தில்
இருந்தபொழுது
நடந்த
இந்த
விஷயத்தையும்
நடந்தபடி
வர்ணித்து,
இதையே
அடையாளமாகச்
சொன்னாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஒருநாள்
ஸீதையும்
தாங்களும்
ஸௌக்கியமாய்ப்
படுத்துத்
தூங்கிக்கொண்டிருந்தீர்கள்.
பிறகு
அவள்
தங்களுக்குமுன்
எழுந்துவிட்டாள்.
அப்பொழுது
ஒரு
காக்கை
வேகமாய்ப்
பறந்துவந்து
அவளை
மார்பில்
கொத்திற்று.
பிறகு
அவளுடைய
மடியில்
தாங்கள்
தூங்கும்பொழுது
மறுபடியும்
அந்தக்
காக்கை
அவளை
ஹிம்ஸித்தது.
அடிக்கடி
கூர்மையான
மூக்கால்
மார்பைக்
கிழிக்கையில்
ரத்தம்
பெருகித்
தூங்கிக்கொண்டிருந்த
தங்களுடைய
முகத்தில்
விழத்
தாங்கள்
விழித்துக்கொண்டீர்கள்.
தாங்கள்
ஸுகமாய்த்
தூங்கிக்கொண்டிருக்கையிலேயே
சத்துருக்களை
நாசம்
செய்யும்
ஸாமர்த்தியமுள்ளவர்களல்லவா?
அந்தக்
காக்கையின்
உபத்திரவத்தைத்
தாங்காமல்
ஸீதை
தங்களை
எழுப்பினாள்.
Prose passage
▾
Meaning
Keep
தாங்களோ
க்ஷத்திரியர்;
இக்ஷ்வாகு
குலத்தில்
பிறந்தவர்;
ரணதீரர்;
தங்களுடைய
பாரியை
மார்பில்
காயம்பட்டு
ரத்தம்
பெருகுவதைக்
கண்டு,
கால
ஸர்ப்பத்தைப்போல்
கோபத்தால்
சீறிக்கொண்டு,
‘ஸீதே!
உன்னை
நகங்களால்
இப்படி
மார்பில்
கிழித்துக்
காயப்படுத்தினவன்
எவன்?
கோபம்
கொண்ட
ஐந்துதலை
நாகத்துடன்
விளையாடுகிறவன்
யார்?’
என்று
கூறி
நான்கு
புறத்திலும்
பார்க்கையில்,
அந்தக்
காக்கை
ரத்தத்தால்
பூசப்பட்ட
நகங்களுடன்
எதிரில்
உட்கார்ந்திருப்பதைக்
கண்டீர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அது
இந்திரனுடைய
பிள்ளையான
ஜயந்தனல்லவா?
தாங்கள்
அவனிடத்தில்
கோபம்
கொண்டதைக்
கண்டு
வாயுவேகத்துடன்
பூமிக்குள்
மறைந்தான்.
தாங்கள்
மஹாபுத்திமானானதால்
அவனுடைய
நிஜஸ்வரூபத்தையும்
கெட்ட
எண்ணத்தையும்
கண்டு
அவனைக்
குரூரமாய்த்
தண்டிக்கவேண்டுமென்று
நிச்சயித்து.
ஆஸனத்திலிருந்து
ஒரு
தர்ப்பத்தை
எடுத்து
அதில்
பிரஹ்மாஸ்திரத்தின்
மந்திரத்தைப்
பிரயோகித்தீர்களல்லவா?
அந்த
அஸ்திரம்
அக்னிஜ்வாலைகளைக்
கக்கிக்கொண்டு
அந்தக்
காக்கையைத்
துரத்திற்று.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
அவன்
தாய்
தகப்பனையும்
தேவர்களையும்
மஹாரிஷிகளையும்
சரணமடைந்தும்
அவர்கள்
கைவிட்டார்கள்.
பிறகு
மூன்று
லோகங்களிலும்
அலைந்தும்
காப்பாற்றுவார்
இல்லை.
ஆகையால்
மறுபடியும்
தங்களிடத்திலேயே
வந்து
தங்களைச்
சரணமடைந்து
பாதங்களில்
விழுந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
லோகங்களுக்கும்
தாங்கள்
ரக்ஷகர்;
சரணமடைந்தவர்களைக்
காப்பாற்றுவதென்ற
தர்மத்தை
அனுஸரித்தும்,
பூர்வத்தில்
தங்களுடைய
முன்னோரான
ககுத்ஸ்தரால்
ஒத்தாசை
செய்யப்பட்ட
இந்திரனுடைய
புத்திரனென்ற
அபிமானத்தாலும்,
அவன்
மஹாபராதம்
செய்திருக்கிறானென்பதையும்
அதற்காக
அவனைக்
கொல்லவேண்டியதென்பதையும்
மறந்து,
அபாரகிருபையால்
ரக்ஷித்தீர்கள்.
ஆனால்
பிரஹ்மாஸ்திரம்
வீணாகாது;
அதற்காக
அவனுடைய
வலது
கண்ணைப்
பலியாகக்
கொடுக்கச்
செய்தீர்கள்.
பிறகு
அவன்
தங்களையும்
தசரதரையும்
நமஸ்கரித்து
தங்களிடத்தில்
உத்தரவு
பெற்றுக்கொண்டு
தன்னிருப்பிடம்
சென்றான்.
Prose passage
▾
Meaning
Keep
தாங்கள்
அஸ்திரங்களின்
ரஹஸ்யத்தை
அறிந்தவர்களுக்குள்
சிரேஷ்டரல்லவா?
தங்களுடைய
பலத்திற்கும்
வீரியத்திற்கும்
எல்லையுண்டோ?
தாங்கள்
சுத்த
க்ஷத்திரிய
வீரனல்லவா?
குலாசாரத்தைப்
பூர்ணமாக
அனுஷ்டிக்கிறவர்களல்லவா?
இப்படியிருந்தும்
அந்த
பிரஹ்மாஸ்திரத்தை
ராக்ஷஸர்களிடத்தில்
ஏன்
பிரயோகிக்கக்கூடாது?
நாக
கந்தர்வ
அஸுர
மருத்கணங்களும்
யுத்தத்தில்
ராமனுக்கெதிரில்
நிற்கமுடியாதென்பது
லோகப்பிரஸித்தமல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
அவருக்கு
வீரியம்
கொஞ்சமாவது
இருந்தால்,
என்னை
மறுபடியும்
அடையவேண்டுமென்ற
கவலை
கொஞ்சமாவது
இருந்தால்,
கூர்மையான
பாணங்களால்
ராவணனை
யுத்தத்தில்
கொல்லவேண்டும்.
மஹாபராக்கிரமசாலியும்
ரோஷமுடையவனுமான
லக்ஷ்மணனாவது
தமையனுடைய
உத்தரவு
பெற்றுக்கொண்டு
ஏன்
என்னைக்
காப்பாற்றவில்லை?
அந்தப்
புருஷசிரேஷ்டர்கள்
தேஜஸில்
வாயுவிற்கும்
அக்னிக்கும்
ஸமானர்கள்.
தேவர்களும்
நெருங்கக்கூடாதவர்கள்;
எதையும்
செய்ய
சக்தியுள்ளவர்கள்;
இப்படியிருந்தும்
என்னை
ஏன்
கவனிக்கவில்லை?
சத்துருக்களுக்குக்
காலர்களும்
ஸமர்த்தர்களுமான
ராமலக்ஷ்மணர்கள்
என்னை
இப்படி
உபேக்ஷை
செய்வதைப்
பார்த்தால்,
நான்
ஏதோ
மஹாபாபத்தைச்
செய்திருக்கிறேன்
என்பதில்
ஸந்தேகமில்லை
என்று
தீனமாய்க்
கண்ணீர்
விட்டுக்கொண்டு
ஜானகி
சொன்னதைக்
கேட்டு,
நான்
இவ்விதம்
சொன்னேன்.
Prose passage
▾
Meaning
Keep
‘தாயே!
ராகவன்
தங்களைவிட்டுப்
பிரிந்த
சோகத்தால்
வேறொரு
காரியத்திலும்
மனம்
செல்லாதவராய்
இருக்கிறார்.
ராமன்
துக்கப்படுகையில்
லக்ஷ்மணன்
தபிக்கிறாரென்று
சொல்லவேண்டுமோ?
இது
ஸத்தியமென்று
பிரமாணம்
செய்கிறேன்.
போகட்டும்;
எவ்வளவோ
கஷ்டப்பட்டுத்
தங்களைக்
கண்டுபிடித்தேனல்லவா?
இனிமேலும்
தாங்கள்
துக்கப்படவேண்டுமா?
தாங்கள்
அனுபவிக்கும்
ஸகல
கஷ்டங்களும்
இந்த
க்ஷணத்திலேயே
நீங்கப்போவதைப்
பார்ப்பீர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
‘புருஷ
சிரேஷ்டர்களான
அந்த
ராஜகுமாரர்கள்
தங்களைப்
பார்க்கவேண்டுமென்ற
ஆவலுடன்
அதிசீக்கிரத்தில்
இங்கே
வந்து
லங்கையைச்
சாம்பலாக்குவார்கள்.
ராவணனைப்
புத்திர
மித்திர
ஸகல
பரிவாரங்களுடன்
ராகவன்
யுத்தத்தில்
கொன்று
தங்களை
அயோத்யைக்கு
அழைத்துப்போவார்.
இது
நிச்சயம்.
ஆகையால்
ராமனுக்கு
நன்றாய்த்
தெரிந்ததாயும்
அவருக்குப்
பிரீதியை
உண்டுபண்ணக்
கூடியதாயும்
இருக்கும்
ஓர்
அடையாளத்தைத்
தரவேண்டும்
என்று
பிரார்த்தித்தேன்.’
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஸீதை
ஸகல
திக்குகளிலும்
பார்த்துத்
தன்
வஸ்திரத்திலிருந்து
இந்த
ஆபரணத்தை
அவிழ்த்துத்
தங்களுக்கு
அடையாளமாகக்
கொடுக்கும்படி
என்னிடத்தில்
ஒப்புவித்தாள்.
தங்களுக்காக
அதைப்
பெற்றுக்கொண்டு
ஸீதாதேவியை
நமஸ்கரித்துத்
திரும்பிப்
போக
யத்தனித்தேன்.
நான்
தேகத்தை
வளர்த்துக்கொண்டு
புறப்படத்
தயாராக
இருப்பதைக்
கண்டு
ஸீதை,
Prose passage
▾
Meaning
Keep
‘ஐயோ!
இவனும்
போய்விட்டால்
என்ன
செய்வேன்?’
என்று
கண்ணீரால்
முகம்
நனைந்து
குரல்
தழுதழுக்கச்
சோகம்
தாங்காமல்
‘ஆஞ்ஜநேய!
புருஷ
ஸிம்ஹங்களான
ராமலக்ஷ்மணர்களையும்
ஸுக்ரீவனையும்
க்ஷேமம்
விசாரித்தேனென்று
சொல்லவேண்டும்.
இந்த
துக்க
ஸமுத்திரத்திலிருந்து
ராகவன்
என்னைக்
கரையேற்றும்படி
செய்யவேண்டியது
உன்
கடமை.
நான்
அனுபவிக்கும்
இந்தத்
தீவிரமான
சோகத்தையும்
ராக்ஷஸிகள்
என்னைக்
குரூரமாய்
ஹிம்ஸிப்பதையும்
ராமனிடத்தில்
நீ
விஸ்தாரமாகச்
சொல்லவேண்டும்.
நீ
போகிற
வழியில்
உனக்கு
ஸகல
க்ஷேமங்களும்
உண்டாகட்டும்’
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
ராஜசிரேஷ்ட!
அந்தப்
புண்யவதி
சொல்லமுடியாத
துக்கத்துடன்
நான்
இது
வரையில்
தெரிவித்த
விஷயங்களைத்
தங்களிடத்தில்
விக்ஞாபனம்
செய்யச்
சொன்னாள்.
இதைக்கேட்டு,
ஸீதை
பூர்ணமான
க்ஷேமத்தை
அடையும்படி
தாங்கள்
கவலையெடுத்துக்கொள்ளவேண்டும்”
என்று
ஹநுமார்
சொன்னார்.
43
▾
Meaning
Keep
ஏதத்
தவார்யா
ந்ருப
ராஜஸிம்ஹ
ஸீதா
வச:
ப்ராஹ
விஷாத³
பூர்வம்
|
ஏதச்ச
பு³த்⁴வா
க³தி³தம்
மயா
த்வம்
ஶ்ரத்³த⁴த்ஸ்வ
ஸீதாம்
குஶலாம்
ஸமக்³ராம்
||
Previous
←
சூடாமணியைக் கண்டு ராமன் துக்கித்தது
Next
ஸீதையின் விருத்தாந்தம் (தொடர்ச்சி)
→